- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னை வாகன ஓட்டிகளுக்கு! நாளை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! என்ன காரணம்?
சென்னை வாகன ஓட்டிகளுக்கு! நாளை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! என்ன காரணம்?
பிப்ரவரி 15ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வாகன ஓட்டிகளுக்கு! நாளை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! என்ன காரணம்?
தலைநகர் சென்னை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. அவ்வப்போது மெட்ரோ பணி, பொது நிகழ்ச்சி மற்றும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பை முன்கூட்டியே போக்குவரத்து காவல்துறை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை இசை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி பிப்ரவரி 15ம் தேதி அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் மதியம் 3 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.
தேனிசை தென்றல் தேவா
மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/காந்திமண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலணி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டென்ஷன் வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
போக்குவரத்து மாற்றம்
சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் (வளைவு மூலம்) லோட்டஸ் காலனி வழியா இலக்கை அடையலாம். அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவு வாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்ற ஊகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப்சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.
நந்தனம் போக்குவரத்து மாற்றம்
அண்ணாசாலையில் மதியம் இரண்டு மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ இரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.