ஒரே நேரத்தில் சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?
சென்னையின் முக்கிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும். கோயம்பேடு, குமணஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
power cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
Chennai Power Shutdown
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Koyambedu
கோயம்பேடு:
ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, SAF கேம்ஸ் கிராமம், அழகிரி நகர், சின்மயா நகர், லோகநாத நகர், இந்திரா காந்தி தெரு, மங்களி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
Kumananchavadi
குமணன்சாவடி:
கோல்டன் ஹோம்ஸ் எப்டிஆர்1, கோல்டன் ஹோம்ஸ் எஃப்டிஆர்2, பூந்தமல்லி பைபாஸ், பிஎஸ்என்எல், எம்டிசி டெப்போ மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.