MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில்! ஐந்து பெண்கள் செய்த கேவலமான வேலை! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில்! ஐந்து பெண்கள் செய்த கேவலமான வேலை! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி ஊழியர் டில்லிபாபு வீட்டில் ஷூவில் வைத்திருந்த சாவியை எடுத்து 5 பெண்கள் 19 சவரன் நகைகளைத் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு 5 பெண்களும் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 24 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IT Employees house

IT Employees house

சென்னை துரைப்பாக்கம் பல்லவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (33). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் எப்போதும் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஷூவில் வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல்  கடந்த ஏப்ரல் 9ம் தேதி சாவியை வீட்டு வாசலில் உள்ள ஷூவில் வைத்து விட்டு சென்றிருக்கிறார். 

24
Gold robbery

Gold robbery

19 சவரன் நகைகள் கொள்ளை

பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 19 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 

34
chennai police

chennai police

சிசிடிவி காட்சிகளில் சிக்கிய பெண்கள்

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் டில்லிபாபு புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது  கண்ணகிநகரை சேர்ந்த  5 பெண்கள் என்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க: நேற்று 10 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்! இன்று மழைக்கு வாய்ப்பா? வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!

44
women arrest

women arrest

ஐந்து பெண்கள் கைது

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்ணகி நகரை சேர்ந்த சுமதி (23), கலைவாணி (19), மீனா (30), கஸ்தூரி (23), ரம்யா (21) ஆகிய 5 போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 19 சவரன் நகைகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்போது வாடிக்கையாக ஷூவில் சாவியை மறைத்து வைத்து வெளியே செல்வதை நோட்டமிட்ட பெண் கொள்ளையர்கள் சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். ஐ.டி.ஊழியர் வீட்டில் பெண்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
குற்றம்
கொள்ளை
காவல்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Recommended image2
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image3
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved