Special Buses: சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரை ரயில்கள் ரத்து! மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட குட்நியூஸ்!
Special Buses: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Railway Department
இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில் எந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டுகிறதோ அதே அளவுக்கு மின்சார ரயிலும் வருமானத்தை ஈட்டுகிறது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Electric Train
அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் மற்றும் முழுமையாக மின்சார ரயில் ரத்து செய்யப்படும். அதன்படி இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரிவலம் வரும் பக்தர்களிடம் அடாவடி செய்யும் திருநங்கைகள்! கலெக்டர் விடுத்த எச்சரிக்கை! என்னென்னு தெரியுமா?
Chennai Electric Train Cancelled
சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுபகூர்த்த தினம் என்பதாலும் பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
MTC Special Buses
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: School Student: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் செல்லுபடியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
Special Buses
எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி. நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.