Chennai Secretariat Building: தலைமைச் செயலகத்தில் அதிர்வு? அலறியடித்து வெளியே ஓடிய ஊழியர்கள்! நடந்தது என்ன?
Namakkal Kavignar Maaligai Building: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்ஸ் விரிசல் காரணமாக ஊழியர்கள் அலறியடித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 11 தளங்களைக் கொண்டது. இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கம்போல், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். கட்டிடத்தின் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் 11 மாடி கட்டிடம் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஊழியர்கள் வழக்கம் போல் காலையில் பணியிடம் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிர்வு ஏற்பட்டதாக கூறி ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Ration Shop: அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு! குஷியில் பொதுமக்கள்!
இதனையடுத்து காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான். பயப்படத் தேவையில்லை. எனவே எந்த அச்சமும் இல்லாமல் உள்ளே செல்லுங்கள் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர். மேலும் பொதுப்பணித்துறை இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: Vande Bharat Sleeper Coach: முதல் முறையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
இதனையடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. புதிய டைல்ஸ்கள் உடனடியாக மாற்றப்படும் என்றார்.