- Home
- Tamil Nadu News
- சென்னை
- புருஷன் கூட பைக்கில் சென்ற அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை! வசமாக சிக்கிய போலீஸ்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
புருஷன் கூட பைக்கில் சென்ற அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை! வசமாக சிக்கிய போலீஸ்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை அயனாவரத்தில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவருக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஆபாச சைகை காட்டிய நபரை கணவர் மடக்கிப் பிடித்தார்.

அதிமுக பெண் நிர்வாகி
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி கடந்த 30-ம் தேதி நள்ளிரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர் அதிமுக பெண் நிர்வாகிக்கு முத்தம் கொடுப்பது உள்ளிட்ட ஆபாச சைகளை காண்பித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்து கணவரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.
விரட்டி சென்று மடக்கி பிடித்த கணவர்
கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை
இதையடுத்து ஆபாச சைகளை செய்தவரை கணவர் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தியதில் அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை காட்டியவர் காவலர் தினேஷ் என்பதும் மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
இதையடுத்து காவலர் தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த தகவல் உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததும் காவலர் தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு
போலீஸ் மீது புகாரளித்தவரின் கணவர் மீது வழக்கு
இதனிடையே மதுபோதையில் இருந்த தன்னை தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் மீது தினேஷ் புகார் அளித்ததை அடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

