ஐபிஎல் 2025: பெயரில் மட்டுமல்ல சொத்து மதிப்பிலும் வருண் 'சக்கரவர்த்தி' தான்! இத்தனை கோடியா?
சாம்பியன்ஸ் டிராபியில் தனது மாயாஜால ஸ்பின் பந்துவீச்சு மூலம் எதிரணி வீரர்களை கலங்கடித்த வருண் சக்கரவர்த்தியின் ஐபிஎல் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்ப்போம்.

Varun Chakravarthy Net Worth: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. மே 25 அன்று இறுதிப் போட்டி நடைபெறும். மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

வருண் சக்கரவர்த்தி சொத்து மதிப்பு
இந்நிலையில், இந்திய அணியின் மிஸ்டரி ஸ்பின்னராகவும், ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடும் வருண் சக்கரவர்த்தியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம். ஒரு கட்டிடக் கலைஞரிலிருந்து இந்திய கிரிக்கெட் வீரராக மாறிய வருண் சக்கரவர்த்தியின் பயணம் அசாதாரணமானது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், வருண் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பிடித்தார்.
இந்தியாவின் மர்ம சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, தனது அற்புதமான பந்துவீச்சு மூலம் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் உள்பட மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வருண் சக்கரவர்த்தியின் வெற்றிப் பயணம் ஊக்கமளிக்கிறது. முதலில் விக்கெட் கீப்பராக இருந்த அவர், கட்டடக்கலை பட்டம் பெற கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய சிக்கல் – தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு காயம்!
வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆனால் பின்னர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தார். 2018ல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) இடம்பிடித்து அசத்தியதால் 2019 ஆம் ஆண்டில் ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியது. அதன்பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்ற பிறகுதான் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது. கொல்கத்தா அணியில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.12 கோடிக்கு அந்த அணி அவரை தக்கவைத்துக் கொண்டது. கடந்த இரண்டு சீசன்களில் தொடர்ந்து 20 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அவர், KKR இன் பந்துவீச்சு தாக்குதலில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி வருமானம்
வருண் சக்கரவர்த்தி 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமானார், அதன் பின்னர் 18 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளுக்கு மேல் சிக்கன விகிதத்தில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு இன்னும் மத்திய பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை என்றாலும், அவர் ஒரு சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார். வருண் சக்கரவர்த்தி லோகோ, ஆசிக்ஸ், விஷனரி 11 மற்றும் கோலெக்சியன் போன்ற பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். ஒரு பிராண்ட் ஒப்பந்தத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பெறுகிறார்.
மேலும் இவர் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய கார்களை வைத்துள்ளார். கிரிக் டிராக்கரின் கூற்றுப்படி, வருண் சக்கரவர்த்தியின் மதிப்பிடப்பட்ட நிகர சொத்து மதிப்பு ரூ.40 கோடி என கூறப்பட்டுள்ளது. வருணின் வருமானம் ஐபிஎல் ஒப்பந்தங்கள், போட்டிக் கட்டணம், பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் மூலம் வருகிறது.
ஐபிஎல் தொடரில் தோனி அருகில் இருக்க ஆசைப்பட்டேன்: சஞ்சு சாம்சன்!