- Home
- Sports
- 2 ஆண்டு காதல்! திருமணத்துக்கு தடையாக இருந்த கொரோனா! இது வருண் சக்கரவர்த்தியின் லவ் ஸ்டோரி!
2 ஆண்டு காதல்! திருமணத்துக்கு தடையாக இருந்த கொரோனா! இது வருண் சக்கரவர்த்தியின் லவ் ஸ்டோரி!
இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார். அவரது காதல் கதை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Varun Chakravarthy love story
இந்திய அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தின் பெயர் தான் இப்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. துபாயில் நேற்று துபாயில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து டி20 தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகனாக ஜொலித்த அவர் இப்போது சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து இந்திய அணியின் ஸ்டார் வீரராக உருவெடுத்துள்ளார். ஆகஸ்ட் 29, 1991 அன்று கர்நாடகாவின் பிதாரில் பிறந்த வருண் சக்கரவர்த்தி கட்டிடக் கலைஞர் வேலையை விட்டு விட்டு கிரிக்கெடுக்கு வந்தார்.
வருண் சக்கரவர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை நேஹா கெடேகர் என்ற மனைவியும், ஆத்மன் என்ற மகனும் உள்ளனர். வருணும், நேஹா கெடேகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, இரண்டு வருடங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்தனர்.
ஒருவருக்கொருவர் உயிராய் நேசித்த இவர்கள் இருவரும் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி! மேட்ச் வின்னர் விலகல்? இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!
வருண் சக்கரவர்த்தி திருமண வாழ்க்கை
ஆனால் அப்போது இந்தியாவில் பரவிய கொரோனா இவர்களின் திருமணத்துக்கு சில மாதங்கள் தடை போட்டது. இதனால் பல மாதங்கள் கழித்து 2020ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இவர்கள் இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் இந்த தம்பதிக்கு ஆத்மன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தியின் மனைவி நேஹா கெடேகர் ஜனவரி 4, 1995 அன்று மும்பையில் பிறந்தார். அவருக்கு மணாலி கெடேகர் மற்றும் கைரன் கெடேகர் என்று இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். கணவர் உலகின் மிகப்பிரலமான வீரராக இருந்தாலும் நேஹா கெடேகர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்.
அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் 681 பின்தொடர்பவர்கள் உள்ளனர். புகைப்படம் எடுத்தல், பயணம் செய்தல் மற்றும் கிரிக்கெட் பார்ப்பது ஆகியவை நேஹாவின் பொழுது போக்குகளாக உள்ளன. வருண் சக்கரவர்த்தி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பதும், விஜய் உருவத்தை கையில் பச்சைகுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
4 ஆண்டுகளுக்கு முன் அவமானப்பட்ட 'அதே' இடத்தில் ஆட்டநாயகன்! யார் இந்த வருண் சக்கரவர்த்தி?