சுனில் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா பரபரப்பு புகார்! என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுனில் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா பரபரப்பு புகார்! என்ன காரணம்?
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 3 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. ஒரு போட்டி டிராவியில் முடிந்தது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைய ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாகும்.
அதுவும் அணிக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 சரசாரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன்சியிலும் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறியதால் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் கழட்டி விடப்பட்டார். ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவிய நிலையில், ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
ரோகித் சர்மா-சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா தொடரின் தோல்வியால் ரோகித் சர்மா மீது ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அதுவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மா மீது அதிக அளவிலான விமர்சனங்களை வைத்தார்.
அதாவது''ரோகித் சர்மா பேட்டிங் பார்மை இழந்ததால் சிட்னி டெஸ்ட்டில் இருந்து விலகி இருக்கிறார். அணியின் நலனுக்காக யாராவது ஒருவர் கேப்டன் பதவியை ஏற்க வேண்டிய நேரம் இது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்த ஜஸ்பிரித் பும்ரா ஒரு அருமையான தேர்வாக இருந்திருப்பார்'' என்று சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார்.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!
சுனில் கவாஸ்கர் மீது ரோகித் சர்மா புகார்
மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர், ''விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை ரஞ்சி டிராபியில் கண்டிப்பாக விளையாட வைக்க வேண்டும். அப்படி விளையாடாவிட்டால் பிசிசிஐ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வெளிப்படையாக தன் மீது விமர்சனம் வைத்த சுனில் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரோகித் சர்மா
அதாவது சுனில் கவாஸ்கர் தன்னை மோசான முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. சுனில் கவாஸ்கரின் விமர்சனத்தால் ஏற்பட்ட வெளிப்புற அழுத்தம் தனது செயல்திறனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ரோகித் சர்மா பிசிசிஐ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கிரிக்கெட் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-இங்கிலாந்து 3வது டி20: சிக்ஸர் மழையில் நனைய தயாரா? ராஜ்கோட் பிட்ச் எப்படி?