MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • மனைவி ஆர்த்தியை பிரியும் வீரேந்திர சேவாக்?; 20 ஆண்டு திருமண‌ உறவில் விரிசல்; பரபரப்பு தகவல்!

மனைவி ஆர்த்தியை பிரியும் வீரேந்திர சேவாக்?; 20 ஆண்டு திருமண‌ உறவில் விரிசல்; பரபரப்பு தகவல்!

இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி ஆர்த்தி அஹ்லாவத்தை விவகாரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
| Updated : Jan 24 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Virender Sehwag and Aarti Ahlawat

Virender Sehwag and Aarti Ahlawat

வீரேந்திர சேவாக்

இந்திய கிரிக்கெட் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். 'வீரு' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் வீரேந்திரா சேவாக்கின் அதிரடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்த சேவாக், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் 16,000க்கும் மேல் ரன்களை குவித்துள்ளார். கிட்டதட்ட 38 சதங்களை விளாசியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளிலும், பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளிலும் வீரேந்திர சேவாக் பங்கேற்று வருகிறார். சேவாக்கின் மனைவி ஆர்த்தி அஹ்லாவத். இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமனம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆர்யவீர், வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சேவாக்கும், அவரது மனைவியும் ஆர்த்தி அஹ்லாவத்தியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தகவல்கள் கூறுகின்றன.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Virender Sehwag-Aarti Ahlawat divorce?

Virender Sehwag-Aarti Ahlawat divorce?

மனைவி ஆர்த்தியை பிரியும் சேவாக்

அதாவது வீரேந்திர சேவாக்கும், அவரது மனைவியும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியதாகத் தெரிகிறது. இருவரும் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து நடக்க வாய்ப்புள்ளதாகவும் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, ​​சேவாக் தனது மகன்கள் மற்றும் தாயாருடன் இருந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் மனைவி ஆர்த்தி அவர்களுடன் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு சேவாக் பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோயிலுக்குச் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்களிலும் ஆர்த்தி எங்கும் காணப்படாததால் இருவரும் பிரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரஞ்சி டிராபியிலும் சொதப்பிய ரோகித் சர்மா; பண்ட், சுப்மன் கில்லும் படுமோசம்; வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

34
Virender Sehwag Cricket

Virender Sehwag Cricket

புகைப்படங்கள் வைரல் 

ஆனால் சேவாக்கும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்வதாக இருவரும் எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக நெட்டிசன்கள் திரியை கொளுத்திப் போட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் சேவாக், ஆர்த்தி தொடர்பான புகைப்படங்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

டெல்லியை சேர்ந்த ஆர்த்தி அஹ்லாவத் 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்தார். ஆர்த்தி லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவனில் தனது பள்ளிக்கல்வியை பயின்றார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தின் மைத்ரேயி கல்லூரியில் கணினி அறிவியலில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் விவகாரத்து தொடர்ந்து பெருகி வருகிறது.

44
Yuzvendra Chahal

Yuzvendra Chahal

சாஹல், ஹர்திக் பாண்ட்யா 

சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சாஹலுக்கும், அவரது மனைவியும் பிரபல நடனக் கலைஞருமான தனஸ்ரீ வர்மாவும் விவகாரத்து செய்ய இருப்பதாக தீயாக செய்திகள் பரவின. இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் அன்பாலோ செய்ததால் இருவரும் பிரிய உள்ளதாக கருத்துகள் பரவி வந்தன. 

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் பேச வேண்டாம் என ரசிகர்களுக்கு சாஹல் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மனைவியை பிரிவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

India vs England 2nd T20: சென்னை சேப்பாக்கம் பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட் இதோ!
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
Cristiano Ronaldo : 'CR7' சுல்தான் ஓய்வு.. கால்பந்துக்கு 'குட்பை' சொன்ன 'சூப்பர் ஸ்டார்' கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Recommended image3
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved