வெளியில் புலி! வீட்டில் எலி! பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபியின் மோசமான சாதனை!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அந்த அணி மோசமான சாதனை படைத்துள்ளது

RCB Poor Record Bengaluru Chinnaswamy Stadium: ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிம் டேவிட் தனி ஆளாக போராடி 26 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்தார்.
RCB, IPL 2025
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், யான்சென், யுஸ்வேந்திர சஹல், ஹர்பிரித் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு பேட்டிங் செயத பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 24 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆர்சிபி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினாலும் குறைவான இலக்கு என்பதால் வெற்றி பெற முடியவில்லை. ஆர்சிபி அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
ஆர்சிபியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது எப்படி? RCB தோல்விக்கான காரணங்கள் இதுதான்!
Chinnaswamy Stadium Bengaluru
இந்த தோல்வியைத் தொடர்ந்து, ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு சரிந்தது. ஆர்சிபி அணி வெளியில் சென்று விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை தழுவி இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அவர்களின் 46வது தோல்வி இதுவாகும்.
IPL, Sports News Tamil
இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு சொந்த மைதானத்தில் எந்தவொரு அணியும் சந்தித்த அதிகபட்ச தோல்வியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணி புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் 45 தோல்விகளுடன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த மற்ற அணிகள் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் 38 தோல்விகள்), மும்பை இந்தியன்ஸ் (மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 34 தோல்விகள்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (மொஹாலியில் 30 தோல்விகள்) ஆகும்.
CSK vs MI: உள்ளே வந்த 'சிக்சர்' மன்னன்! சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்! பிளேயிங் லெவன் இதோ!