ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபடும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணாதி நாயக்..! போட்டோஸ்..!
சிறிய கிராமத்தில் பிறந்தாலும், கனவுகள் பெரிதாக இருந்தால்... யார் வேண்டுமானாலும் பலர் பாராட்டும் அளவுக்கு உயரலாம் என நிரூபித்து, தற்போது டோக்கியோவில் நடைபெற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள, பிரணாதி நாயக், தீவிர பயிற்சி பெரும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் இந்தியாவிலிருந்து, பிரணாதி நாயக் பங்கேற்க உள்ளார்.
26 வயதான பிரணாதி நாயக், ஏற்கனவே பல ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தின், மிட்னாபூர் மாவட்டத்தில் பிங்லா நகரத்தைச் சேர்ந்த பிரணாதி, 2021 ஆசிய சாம்பியன்ஷிப் ரத்து செய்யப்பட்ட பின்னர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒரு பஸ் டிரைவரின் மகளான, பிரணாதி 2019 ஆம் ஆண்டு ஆசிய கலை ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதன் மூலம் பிரபலமானார்.
இவர் தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக சென்றபோது, திடீர் என ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டதாக கூறி அழைப்பு வந்ததாக மெய் சிலிர்த்தபடி கூறியுள்ளார்.
தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ள பிரணாதி, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி தரவேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது, வெளியாகியுள்ளது. மேலும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கு பிரதமர் மோடி, மம்தா, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.