Hardik : "முயன்ற வரை முயற்சித்தோம்" ஆனால்.. பிரிவை அறிவித்த ஹர்திக் & நடாஷா - உருக்கமாக வெளியிட்ட பதிவு!
Hardik Pandya : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா, நடாஷா உடனான தனது குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
Hardik
கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டது, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவியான செர்பியா நாட்டு நடிகை நட்டாஷா ஆகியோரின் பிரிவை பற்றித்தான். கடந்த 2020ம் ஆண்டு செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகையான நட்டாஷா ஸ்டான்கோவிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா.
சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!
Hardik pandya
நடாஷாவை பொறுத்தவரை, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலம் அடைந்தார். தமிழில் வெளியான "அரிமா நம்பி" படத்தில் கூட ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இது தவிர பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், ஹர்திக் பாண்டியாவோடு சில காலம் "Living Together" உறவில் இருந்து வந்தார். அதன் பிறகு கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
Hardik pandya son
ஏற்கனவே இவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகிய ஆண் குழந்தையோடு, ஒரு நட்சத்திர ஜோடியாகவே இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது திருமண புகைப்படங்களை நட்டாஷா நீக்கியது, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தான் ஹார்திக் பாண்டியாவும், நட்டாஷாவும் விரைவில் பிரிய உள்ளதாக வதந்திகள் பரவியது.
hardik natasha
ஆனால் இது சம்பந்தமாக இருவரும் எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமலேயே இருந்த நிலையில், தற்பொழுது ஹர்திக் மற்றும் நடாஷா வெளியிட்ட பதிவில் "சுமார் 4 ஆண்டு காலங்கள் நானும் நட்டாஷாவும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தோம். இருப்பினும் இப்பொழுது வேறு வழியின்றி ஒரு கடினமான முடிவை நாங்கள் எடுத்து, மனமொத்து இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் இருவருக்கும் கிடைத்த வரம் என்றால் அது எங்கள் மகன் அகஸ்தியா தான், எங்கள் இருவருடையே பாசப்பிணைப்பு நீடித்திருக்க அவன் எப்பொழுதும் உதவியாக இருப்பான். அவனை வளர்ப்பதில் நாங்கள் இருவருமே அக்கறை காட்டுவோம்" என்று கூறியுள்ளார்.
கோலியை வெறித்தனமாக டான்ஸ் ஆட வைத்த டோலிவுட் நடிகர் இவருதான்! காரணம் என்னன்னு தெரியுமா?