MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IND vs ENG 3rd T20: தொடரை வெல்ல இந்திய அணி ரெடி! இளம் வீரர் நீக்கம்? பிளேயிங் லெவன் இதோ!

IND vs ENG 3rd T20: தொடரை வெல்ல இந்திய அணி ரெடி! இளம் வீரர் நீக்கம்? பிளேயிங் லெவன் இதோ!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம். 

3 Min read
Author : Rayar r
Published : Jan 28 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IND vs ENG 3rd T20: தொடரை வெல்ல இந்திய அணி ரெடி! இளம் வீரர் நீக்கம்? பிளேயிங் லெவன் இதோ!

IND vs ENG 3rd T20: தொடரை வெல்ல இந்திய அணி ரெடி! இளம் வீரர் நீக்கம்? பிளேயிங் லெவன் இதோ!

இந்தியா இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும்,  சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று (28ம் தேதி) நடைபெற உள்ளது.

முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல தயாராக இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, 2வது போட்டியின் ஆட்டநாயகன் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆல்ரவுண்ட் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்புகிறார். மேலும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் படுமோசமாக பேட்டிங்கிங் செய்து வருவது கவலைக்குரிய வகையில் உள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியா-இங்கிலாந்து 3வது டி20

இந்தியா-இங்கிலாந்து 3வது டி20

முதல் போட்டியில் டக் அவுட் ஆன அவர், 2வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பீல்டிங்கிலும் இந்திய அணி வீரர்கள் கலக்கி வருகின்றனர். இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் பவுலிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் மோசமாக விளையாடி வருகிறது.

கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டும் முதல் போட்டியில் அரைசதம், 2வது போட்டியில் 45 ரன்கள் எடுத்து நல்ல பார்மில் உள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் அவசர கதியில் ஆடி விக்கெட்டை தாரைவார்க்கின்றனர். கொஞ்சம் பொறுமை காத்தால் ரன்களை சேகரிக்க முடியும். 3வது டி20 போட்டி நடைபெறும் ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. 

ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் டேட்டிங்கா? மனம் திறந்து பேசிய முகமது சிராஜ்!

34
ராஜ்கோட் பிட்ச் ரிப்போர்ட்

ராஜ்கோட் பிட்ச் ரிப்போர்ட்

அதே வேளையில் பாஸ்ட் பவுலிங்குக்கும் ஒத்துழைக்கும். பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருக்கும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் அதிக ரன்களை குவிக்க முடியும். 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக இருக்கும்.இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 228/5 என அதிகப்பட்ச ரன்களை பதிவு செய்துள்ளது.

குறைந்தபட்சமாக கடந்த 2022ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக 87 ரன்களில் சுருண்டு இருக்கிறது. கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பிளேயிங் வெலனில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கடந்த போட்டியில் ஆடிய வீரர்கள் அப்படியே இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டியில் விளையாடாத முகமது ஷமி, இன்றைய போட்டியிலும் பங்கேற்பது சந்தேகம் தான். இதேபோல் கடந்த போட்டியில் சொதப்பிய இளம் வீரர் துருவ் ஜூரலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதும் கேள்விக்குறியாக உள்ளது. 

44
இந்திய அணி பிளேயிங் வெலன்

இந்திய அணி பிளேயிங் வெலன்

3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ர‌வி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி. 

இதேபோல் இங்கிலாந்து அணியிலும் கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் அப்படியே தொடருகின்றனர். இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட்.

3வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்டஸ் குழும சேனல்களிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த போட்டியை காணலாம். 

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Recommended image2
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?
Recommended image3
Virat Kohli: விராட் கோலி நாளையுடன் ஓய்வு? புயலை கிளப்பிய RCB கேப்டன்! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved