GIPKL 2025 : தெலுங்கு சீட்டாஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற Tamil Lioness!
GIPLKL 2025 Womens Final Tamil Lioness Become Champions: குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் 31-19 என்ற புள்ளி கணக்கில் தமிழ் லயனஸ் அணியானது தெலுங்கு சீட்டாஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025
GIPLKL 2025 Womens Final Tamil Lioness Become Champions: ஹரியானாவில் குருகிராமில் குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரின் 2025 முதல் சீசன் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அனைவரும் இடம் பெற்று விளையாடும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் இடம் பெற்று விளையாடி வந்தன. கடந்த 18ஆம் தேதி ஆண்களுக்கான போட்டியுடன் இந்த போட்டி தொடங்கியது. பெண்களுக்கான போட்டி 19ஆம் தேதி தொடங்கியது.
தமிழ் லயன்ஸ் அணி
6 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ் லயன்ஸ் மற்றும் தெலுங்கு சீட்டாஸ் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், தமிழ் லயன்ஸ் அணியானது ரைடு மூலமாக 13 புள்ளிகளும், டேக்கிள் மூலமாக 14 புள்ளிகளும், ஆல் அவுட் மூலமாக 4 புள்ளிகளும் பெற்று மொத்தமாக 31 புள்ளிகள் பெற்றது. இதே போன்று தெலுங்கு சீட்டாஸ் அணியைப் பொறுத்த வரையில் 7 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 2 எஸ்டிராஸ் மூலமாக மொத்தமாக 19 புள்ளிகள் பெற்றது.
ரச்சனா விலாஸ்
தமிழ் லயன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் ரச்சனா விலாஸ் ரைடு மூலமாக 8 புள்ளிகள் பெற்றுக் கொடுத்தார். ஆல் ரவுண்டர் தன்னு 5 புள்ளிகள் எடுத்தார். டிஃபெண்டர் பிரியங்கா 7 டேக்கிள் புள்ளிகள் எடுத்துக் கொடுத்தனர். டிஃபெண்டர் நவ்னீத் 5 புள்ளிகள் எடுத்துக் கொடுத்தார்.
தெலுங்கு சீட்டாஸ்
தெலுங்கு சீட்டாஸ் அணியைப் பொறுத்த வரையில் டிஃபெண்டர் கேப்டன் நிகிதா சோனி 6 டேக்கிள் புள்ளிகள், ரைடர் ரித்து 4 ரைடு புள்ளிகள், அன்ஜூ சஹால் 2 டேக்கிள் புள்ளிகள் எடுத்துக் கொடுத்தனர்.
தமிழ் லயன்ஸ் அணி சாம்பியன்
இறுதியாக தமிழ் லயன்ஸ் அணி 31 புள்ளிகள் எடுக்க தெலுங்கு சீட்டாஸ் 19 புள்ளிகள் மட்டுமே பெற்று 14 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக தமிழ் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.