MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மனைவிக்காக ஜூனியர் என் டி ஆரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சகால்!

மனைவிக்காக ஜூனியர் என் டி ஆரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சகால்!

ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என் டி ஆரை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சகால் அவரிடம் தனது மனைவி தனஸ்ரீக்காக ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். 

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Jan 17 2023, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்ற கணக்கிலும் இழந்து வெளியேறியது. 

210
நியூசிலாந்து:

நியூசிலாந்து:

இதையடுத்து, இந்தியா வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்க இருக்கிறது. 

310
இந்தியா மற்றும் நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

410
ஹைதராபாத்

ஹைதராபாத்

இதற்காக இரு அணி வீரர்களும் ஹைதராபாத் சென்றுள்ளனர். ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் முதல் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணியினர் இன்று தங்களது பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

510
ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

இதே போன்று இந்திய அணியினரும் தங்களது பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மேல்மதிப்பீடு மற்றும் உடல் தகுதி திறனுக்காக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

610
ஜூனியர் என் டி ஆர்

ஜூனியர் என் டி ஆர்

இதற்கிடையில், ஹைதராபாத்தைச் சுற்றிப் பார்த்த இந்திய வீரர்கள் அங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சகால், இஷான் கிஷான், ஷர்துல் தாகூர், சுப்மன் கில் ஆகியோர் அந்தப் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

710
சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி

சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி

சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ஜூனியர் என் டி ஆருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த சூர்யகுமார் யாதவ், உங்களை சந்தித்தது அருமையாக இருந்தது அண்ணா. ஆர் ஆர் ஆர் படம் கோல்டன் குளோப் விருது வென்றதற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

810
இஷான் கிஷான்

இஷான் கிஷான்

இதையடுத்து இஷான் கிஷான் நடிகர் ஜூனியர் என் டி ஆருடன் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தி லெஜெண்ட் அண்ணா உங்களைப் பார்த்து பொன்னான நேரத்தை கழித்தேன். உங்களது எல்லா வெற்றிகளுக்கும் மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

910
யுஸ்வேந்திர சகால்

யுஸ்வேந்திர சகால்

யுஸ்வேந்திர சகால் ஒரு படி மேல் சென்று தனது அன்பு மனைவி தனஸ்ரீ வர்மாவுக்காக ஜூனியர் என் டி ஆரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சகால், ஜூனியர் என் டி ஆரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. என்ன ஒரு ஜென்டில்மேன். கோல்டன் குளோப் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
 

1010
யுஸ்வேந்திர சகால் மனைவி தனஸ்ரீ வர்மா

யுஸ்வேந்திர சகால் மனைவி தனஸ்ரீ வர்மா

யுஸ்வேந்திர சகால் ஒரு படி மேல் சென்று தனது அன்பு மனைவி தனஸ்ரீ வர்மாவுக்காக ஜூனியர் என் டி ஆரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சகால், ஜூனியர் என் டி ஆரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. என்ன ஒரு ஜென்டில்மேன். கோல்டன் குளோப் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தனஸ்ரீ வர்மா
யுஸ்வேந்திர சாஹல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
Recommended image2
ஜிம்பாப்வேயை நசுக்கிய WI.. 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. எகிறிய ரன் ரேட்.. இந்தியாவுக்கு நெருக்கடி!
Recommended image3
தோல்வி பயம்: ஆடிப்போன இந்திய அணி! அந்த 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. டி20 உலகக்கோப்பையில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved