எந்த வீரரும் செய்யாத சாதனை – 23 வயதுக்குள் 2 முறை சதம் அடித்த முதல் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலமாக 23 வயதுக்குள்ளாக 2 முறை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுகுக்கு இடையிலான 2024 கிரிக்கெட் தொடரின் 38ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். இதில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
மேலும், ஆவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்தில் இருவரும் நிதானமான தொடங்கி அதன் பிறகு அதிரடி காட்டினர்.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
பவர்பிளே முட்வில் ராஜஸ்தான் ராயல்ஸ் 61 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. விட்டு விட்டு மழை பெய்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், ஜோஸ் பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி நிதானமாக விளையாடினார்.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிடியாக விளையாடி 31 பந்துகளில் அரைசதம் அடித்து 8ஆவது ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும், அதிரடி காட்டி 59 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதம் அடித்தார். அதுவும், 2ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவே சதம் விளாசியிருக்கிறார்.
Yashasvi Jaiswal, Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
இறுதியாக பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 183 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்களும், சாம்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Yashasvi Jaiswal, Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
இந்த நிலையி, இந்தப் போட்டில் ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலமாக 23 வயதிற்குள் ஐபிஎல்லில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2ஆவது முறையாக சதம் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 124 ரன்கள் அடித்தார்.
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match
இளம் வயதில் 2 சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
22 வயது 116 நாட்கள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்*
23 வயது 255 நாட்கள் – சுப்மன் கில்
24 வயது 138 நாட்கள் – சஞ்சு சாம்சன்
25 வயது 196 நாட்கள் – டேவிட் வார்னர்
27 வயது 184 நாட்கள் – விராட் கோலி
124 vs MI Wankhede 2023 (21 வயது 123 நாட்கள்) – யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் சதம்
104*vs MI Jaipur 2024 (22 வயது 116 நாட்கள்) – 2ஆவது சதம்.