MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs Bangladesh: கான்பூரில் 41 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை தக்க வைக்குமா இந்தியா?

India vs Bangladesh: கான்பூரில் 41 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை தக்க வைக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற 23 டெஸ்ட் போட்டிகளில் 41 ஆண்டுகளாக தோல்வியே காணாத இந்தியா, இந்த போட்டியிலும் தனது வெற்றியைத் தொடருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Sep 27 2024, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
IND vs BAN Kanpur Test

IND vs BAN Kanpur Test

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களே இந்தப் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
India vs Bangladesh, Kanpur 2nd Test

India vs Bangladesh, Kanpur 2nd Test

இதுவரையில் இந்தியா கான்பூரில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 7 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு 13 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 41 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதுவரையில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

இன்று கான்பூரில் இந்தியா தனது 24 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 41 ஆண்டுகால வரலாற்று சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும். ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவினால், இந்தியாவின் 41ஆவது ஆண்டுகால வெற்றிப் பயணத்திற்கு வங்கதேசம் முதல் முறையாக முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 14 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

35
India vs Bangladesh

India vs Bangladesh

கான்பூர்: வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலின் தாக்கம் தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் தொடரையும் பாதித்துள்ளது. வங்காள அணி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையே உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெறவுள்ள 2வது டெஸ்டுக்கு முன்னதாக திங்கள்கிழமை அகில பாரத இந்து மகாசபா ஆதரவாளர்கள் மைதானம் அருகே சாலை மறியல் செய்து ஹோமம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர், 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மைதானத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். போட்டியின் போது வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல், பயணிக்கும் பாதை மற்றும் மைதானம் அருகே ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

45
Kanpur Test

Kanpur Test

நவம்பர் 6ம் தேதி டி20 போட்டியின் போது குவாலியர் முழுவதும் நிறுத்தம்!

குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நவம்பர் 6ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறவுள்ள டி20 போட்டியின் போது 'குவாலியர் முழுவதும் நிறுத்தம்' செய்ய இந்து மகாசபா அழைப்பு விடுத்துள்ளது. 'வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல' என்று அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

55
Kanpur 2nd Test

Kanpur 2nd Test

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். அதோடு, பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

அதே போன்று ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
Recommended image2
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!
Recommended image3
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved