MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Mohammad Rizwan: பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்தாலும், புதிய ஆல் டைம் டெஸ்ட் சாதனை படைத்த ரிஸ்வான்!

Mohammad Rizwan: பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்தாலும், புதிய ஆல் டைம் டெஸ்ட் சாதனை படைத்த ரிஸ்வான்!

பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்து பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், இந்த தோல்விப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 26 2024, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
PAK vs BAN Test

PAK vs BAN Test

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை தனது பெயரில் பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.

26
PAK vs BAN Test

PAK vs BAN Test

ராவல்பிண்டியில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள் அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட்களில் முதல் வெற்றியைப் பெற்றனர். அத்துடன் பாகிஸ்தானை சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இதற்கிடையில், இந்தப் போட்டியில் முகமது ரிஸ்வான் வீரதீரமாக விளையாடி ரன்கள் குவித்தார்.

36
PAK vs BAN Test

PAK vs BAN Test

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ரிஸ்வான் 171* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்வதற்கு உதவினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அரைசதம் அடித்து அசத்தினார்.

46
PAK vs BAN Test

PAK vs BAN Test

பாகிஸ்தானின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரிஸ்வான் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தபோதிலும், அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேறு எந்த வீரர்களிடமிருந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

56
PAK vs BAN Test

PAK vs BAN Test

சொந்த மண்ணில் டெஸ்ட்களில் பாகிஸ்தான் முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய போதும், இந்தப் போட்டியில் ரிஸ்வான் அபாரமான இன்னிங்ஸுடன் வரலாற்றில் இடம் பிடித்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 222 ரன்கள் எடுத்த ரிஸ்வான், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற தஸ்லிம் ஆரிஃப் சாதனையை முறியடித்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் இதுவரை 3 பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்கள் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

66
PAK vs BAN Test

PAK vs BAN Test

பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்:

222 (171* & 51) - முகமது ரிஸ்வான் vs வங்கதேசம், ராவல்பிண்டி, 2024

210 (210* & DNB) - தஸ்லிம் ஆரிஃப் vs ஆஸ்திரேலியா, ஃபைசலாபாத், 1980

209 (209 & 0) - இம்தியாஸ் அகமது vs நியூசிலாந்து, லாகூர், 1955

197 (150 & 47*) - ரஷீத் லத்தீஃப் vs வெஸ்ட் இண்டீஸ், ஷார்ஜா, 2002

196 (78 & 118) -சர்பராஸ் அகமது vs வெஸ்ட் இண்டீஸ், கராச்சி, 2023

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
Recommended image2
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
Recommended image3
அரையிறுதிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து! பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - நடக்குமா மிராக்கிள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved