ரோகித் சர்மா vs ஹர்திக் பாண்டியா – ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் தூக்கி எறிய போகும் வீரர் யார்?
Rohit Sharma and Hardik Pandya, IPL 2025: கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், ரோகித் சர்மாவை தக்கவைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MI Retained Players
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்த சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா திகழ்ந்தார். ஆனால், இப்போது அவர் மும்பை அணியில் இருக்கணுமா, வேண்டாமா என்று யோசிக்க தொடங்கியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு அணியும் யாரை தக்க வைக்கலாம், யாரை விடுவிக்கலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கின்றன. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
IPL 2025, Hardik Pandya and Rohit Sharma
அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனானார். ஆனால், இவரது தலைமையிலான மும்பை அணி விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. மேலும், மோசமான சாதனைகளையும் படைத்தது. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அப்படி மும்பை இந்தியன்ஸ் 6 வீரர்களை தக்க வைப்பதாக இருந்தால் முதலில் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்கும். ஆனால், தற்போது மனைவியை பிரிந்த பாண்டியா ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்படியிருக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணியை எப்படி ஹர்திக் பாண்டியாவால் சிறப்பாக வழி நடத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அவர் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma, MI Retained Players
ஆனால், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், அவரை கேப்டனாக தங்களது அணியில் விளையாட வைக்க பஞ்சாப், ஆர்சிபி, லக்னோ அணிகள் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவித்தால் எப்படியும், ரோகித் சர்மா இந்த அணிகளில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. ஒன்று 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். அண்மையில், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமையும் ரோகித் சர்மாவை சேரும். ஆதலால், ரோகித் சர்மாவுக்காக ஒவ்வொரு அணியும் போட்டி போடுகின்றன. ஒருவேளை ரோகித் சர்மா தக்க வைக்கப்படவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள்.
IPL 2025
ஒட்டு மொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது இதே போன்று இந்திய கூட்டணியை தொடர விரும்பினால் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள். இவர்கள் தவிர, இஷான் கிஷான் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோ தக்க வைக்கபட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். ஆதலால், இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்வார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் ஒரு அன்கேப்டு வீரராக மும்பை அணியில் தக்க வைக்கப்படலாம். ஒட்டுமொத்தமாக தக்க வைப்படும் வீரர்களுக்கு ரூ.79 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது