3 ஆண்டுகளுக்கு பிறகு வந்த வாஷி, மிரண்டு போன நியூசிலாந்து- 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!
Washington Sundar, India vs New Zealand 2nd Test: புனேயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுந்தர் மற்றும் அஸ்வினின் பந்துவீச்சு நியூசிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது.
IND vs NZ 2nd Test, Pune, Washington Sundar, Ravichandran Ashwin
Washington Sundar, India vs New Zealand 2nd Test: புனேவில் நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ்வுக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சினால், புனே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெவோன் கான்வே (76) மற்றும் ரசின் ரவீந்திரா (65) தவிர, மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடிக்கவில்லை. வாஷிங்டன் 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
IND vs NZ 2nd Test, Washington Sundar, Ravichandran Ashwin
இந்தியாவின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3ஆவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 19 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 152 ரன்கள் குவித்தார். பவுலிங்கில் 2 இன்னிங்ஸ்களில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்திய அணிக்கு வரவழைக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு புனே டெஸ்டில் பிளேயிங் 11ல் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
Washington Sundar, India vs New Zealand 2nd Test
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் நம்பிக்கைக்கு ஏற்றார். பெங்களூரு டெஸ்டில் சிறப்பாக பந்து வீசாத அஸ்வின், இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். பெங்களூரு டெஸ்ட் போட்டி வெற்றி நம்பிக்கையோடு புனே டெஸ்டில் டாஸ் வென்ற நியூசி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் எடுத்தார்.
அதன்படி டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் மாறி மாறி பந்து வீசிம் விக்கெட் விழவில்லை. அதன் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் வந்து லாதம் விக்கெட்டை எடுத்தார். அடுத்து வில் யங் மற்றும் டெவோன் கான்வே விக்கெட்டை எடுத்தார்.
India vs New Zealand, Pune Test
இதையடுத்து பந்து வீச வந்த வாஷிங்டன் சுந்தர் 5 கிளீன் போல்டு மற்றும் 2 எல்பிடபிள்யூ என்று மொத்தமாக 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.
இதில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 5 விக்கெட் எடுத்தார். அதன் பிறகு ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு 5 விக்கெட் எடுத்தார். தற்போது முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
India vs New Zealand 2nd Test, Washington Sundar
இது கவுதம் காம்பீருக்கும், அஜித் அகர்கருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இறுதியாக இந்தப் போட்டியில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டிம் சவுதி ஓவரில் கிளீன் போல்டானார். கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி இறங்கும் வரிசையில் கில் களமிறங்கினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் நியூசிலாந்து தொடரை கைப்பற்றும்.