MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2022: நீயெல்லாம் பெரிய ஆளு.. நீ என்கிட்ட என்னப்பா கேட்க போற..! பட்லரிடம் கோலி கலகல

IPL 2022: நீயெல்லாம் பெரிய ஆளு.. நீ என்கிட்ட என்னப்பா கேட்க போற..! பட்லரிடம் கோலி கலகல

ஐபிஎல் 15வது சீசனில் ஜோஸ் பட்லருடனான நகைச்சுவையான உரையாடல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 20 2022, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஐபிஎல் 15வது சீசனில் விராட் கோலியிடமிருந்து பெரிய ஸ்கோர்கள் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த கோலி, இந்திய அணி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் இந்த சீசனில் ஆடுவதால் ரிலாக்ஸாக பல பெரிய இன்னிங்ஸ்கள் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

ஆனால் 13 லீக் போட்டிகளிலும் சோபிக்காத கோலி, லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆர்சிபி கண்டிப்பாக வெற்றியை எதிர்நோக்கியிருந்த போட்டியில் 54 பந்தில் 8பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து ஆர்சிபியின் வெற்றிக்கு உதவினார். முக்கியமான போட்டியில் அதுவும் சேஸிங்கில் அபாரமாக விளையாடி, தான் ஒரு சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார் கோலி.
 

36

கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அடி வெளுத்துவாங்கியது, ஆர்சிபிக்கு மட்டுமல்லாது இந்திய அணிக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும் விஷயமாக அமைந்தது.
 

46

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக, இந்த சீசனில் முதல் அரைசதம் அடித்து ஆர்சிபியை வெற்றி பெறச்செய்து ஆட்டநாயகன் விருதை வென்ற கோலி, ஜோஸ் பட்லருடனான கலகலப்பான சம்பவம் குறித்து பேசினார்.
 

56

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங்கிடம் பேசிய விராட் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டிக்கு பின் ஜோஸ் பட்லர் என்னிடம் வந்து, நான் (பட்லர்) உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றார். நீங்கள்(பட்லர்) ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கிறீர்கள்; நான் ஸ்கோர் செய்யவே முடியாமல் திணறிவருகிறேன். நீங்கள் என்னிடம் என்ன கேட்கப்போகிறீர்கள் என்று கூறினேன். அதன்பின்னர் இருவரும் சிரித்தோம் என்றார் கோலி.
 

66

இந்த சீசனில் 13 போட்டிகளில் 627 ரன்கள் அடித்து பட்லர் தான் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும், அவர் சமகாலத்தின் தலைசிறந்த மற்றும் டாப் கிளாஸ் வீரர். ஆனால் ஃபார்மில் இல்லாததால் பட்லரிடம் அவர் கிண்டலாக பேசியிருக்கிறார்.
 

About the Author

KV
karthikeyan V
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image2
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image3
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved