#INDvsENG பகலிரவு டெஸ்ட்: இந்திய அணியில் களமிறங்கும் அதிரடி ஆல்ரவுண்டர்.. உத்தேச ஆடும் லெவன்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்த நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கின்றன.
pandya
கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ஃபாஸ்ட் பவுலர் பும்ரா ஆடுவார். பும்ராவுடன் அனுபவ ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மாவும் ஆடுவார். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஷ்வின், அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, பும்ரா.