MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஒரு வெற்றி கூட இல்ல; மோசமான சாதனை படைத்த "சைலன்ஸ்" டீம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஒரு வெற்றி கூட இல்ல; மோசமான சாதனை படைத்த "சைலன்ஸ்" டீம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 46ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக 5ஆவது முறையாக சென்னையில் தோல்வி அடைந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 29 2024, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று 46ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் எடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் பிளேயராக வந்த அன்மோல்ப்ரீத் சிங் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

37
CSK vs SRH

CSK vs SRH

நிதிஷ் ரெட்டி 15, எய்டன் மார்க்ரம் 32, ஹென்ரிச் கிளாசென் 20, அப்துல் சமாத் 19, பேட் கம்மின்ஸ் 5, ஷாபாஸ் அகமது 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

47
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

இந்த தோல்வியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னையில் விளையாடிய 5 ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் 4 முறை மோதியுள்ளன. இந்த 4 முறையும் சிஎஸ்கே தான் வெற்றி பெற்றிருக்கிறது.

57
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக தோனி தனது 150ஆவது ஐபிஎல் வெற்றியை பெற்றுள்ளார். இதுவரையில் தோனி விளையாடிய 259 ஐபிஎல் போட்டிகளில் 5178 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 24 அரைசதங்கள் அடங்கும்.

67
CSK vs SRH, 46th IPL 2024

CSK vs SRH, 46th IPL 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டும், மதீஷா பதிரனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

77
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திலிருந்து தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4ஆவது இடத்திலிருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5ஆவது இடத்திலிருந்த டெல்லி கேபிடல்ஸ் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved