MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • SA vs IND 3rd T20I: தொடரை சமன் செய்யுமா இந்தியா? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

SA vs IND 3rd T20I: தொடரை சமன் செய்யுமா இந்தியா? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 14 2023, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
SA vs IND 3rd T20I

SA vs IND 3rd T20I

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

27
SA vs IND T20I

SA vs IND T20I

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்கம் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

37
Suryakumar Yadav vs Aiden Markram

Suryakumar Yadav vs Aiden Markram

இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடும். தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தென் ஆப்பிரிக்கா விளையாடும்.

47
SA vs IND

SA vs IND

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையில், 2ஆவது டி20 போட்டியில் விளையாடாத ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்கு பதிலாக டோனோவன் ஃபெரேரா விளையாடுகிறார்.

57
South Africa vs India T20

South Africa vs India T20

மேலும், மார்கோ ஜான்சன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கேசவ் மகாராஜ் விளையாடுகிறார். மேலும், ஜெரால்ட் கோட்ஸி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நந்த்ரே பர்கர் அறிமுகம் செய்யப்படுகிறார்.

67
SA vs IND 3rd T20I

SA vs IND 3rd T20I

தென் ஆப்பிரிக்கா:

மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரேரா, கேசவ் மகாராஜ், அண்டில் பெஹ்லுக்வாயோ, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.

77
South Africa vs India

South Africa vs India

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஷ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்
ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK vs RR: வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. சஞ்சு சொதப்பல்.. சிஎஸ்கேவை ஊதித்தள்ளிய ராஜஸ்தான்!
Recommended image2
IPL 2026: அனுபவம் வாய்ந்த வீரர்களின் அதிரடி வேட்டை; கோலியின் 'கன்சிஸ்டன்சி, ரோகித்தின் வரலாற்றுச் சாதனை!
Recommended image3
IPL: களமிறங்காமலேயே விடைபெறும் 'தல' தோனி? அதிர்ச்சியில் உறைந்த சிஎஸ்கே ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved