ஐபிஎல் 2025க்கு முன் ஆப்போசிட் டீமுக்கு ஷிவம் துபே வார்னிங்: சிக்ஸருக்கு ரெடி, சம்பவம் இருக்கு!
Shivam Dube Syed Mushtaq Ali Trophy 2024 : ஷிவம் துபே சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக 191க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் 7 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் எடுத்து மாஸ் காட்டியிருக்கிறார்.
Shivam Dube Syed Mushtaq Ali Trophy 2024
Shivam Dube Syed Mushtaq Ali Trophy 2024 : 7 சிக்ஸர்கள், 190க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்: 2024 ஜூலை முதல் டி20 போட்டிகளில் விளையாடாத ஷிவம் துபே ஐபிஎல் 2025க்கு முன் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக 191க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 7 சிக்ஸர்கள் அடித்து அதிரடி இன்னிங்ஸ் ஆடினார்.
ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் இளம் வீரர் ஷிவம் துபே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸர்கள் மழை பொழிந்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 191க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 7 சிக்ஸர்கள் அடித்து அதிரடி இன்னிங்ஸ் ஆடினார்.
Syed Mushtaq Ali Trophy 2024 , Services vs Mumbai
சையத் முஷ்டாக் அலி டிராபி 2024ல் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2025க்கு முன் ரசிகர்களையும், தேர்வாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல செய்தி சொல்லும் வகையில் அதிரடி இன்னிங்ஸ் ஆடினார். இதன் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான 18ஆவது ஐபிஎல் சீசனில் ஷிவம் துபே அசத்தலான இன்னிங்ஸ் ஆடுவார் என்று எச்சரிக்கை விடுத்தார்.
IPL 2025, Shivam Dube
ஆல்-ரவுண்டர் 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 71 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் துபேயின் அதிரடி இன்னிங்ஸால் மும்பை அணி 192/4 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சர்வீசஸ் அணி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை டக் அவுட் செய்ததன் மூலம் ஆரம்பத்தில் சிறப்பான நிலையில் இருந்தது. மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
Chennai Super Kings, Services vs Mumbai
அதன் பிறகு சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். மும்பை அணி 36/2 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கிய இவர்கள் அதிரடி காட்டினர். இவர்கள் இருவரும் 66 பந்துகளில் 4ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் அவுட் ஆவதற்கு முன்பு அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.
மும்பை அணி 192/4 ரன்கள் எடுத்தது. அதிக ரன்கள் இலக்கை துரத்திய சர்வீசஸ் அணி 19.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதோடு மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், துபே, மோஹித் அவாஸ்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Services vs Mumbai, Syed Mushtaq Ali Trophy 2024
மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் E பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளான ஆந்திரப் பிரதேசம் (4 போட்டிகளில் 4 வெற்றிகள்), கேரளா (5 போட்டிகளில் 4 வெற்றிகள்) ஆகியவை 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.