ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் தேர்வு..!

First Published 19, Sep 2020, 8:58 PM

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே எதிர்பார்த்திராத வகையில், ஆடும் லெவனில் ஒரு சர்ப்ரைஸ் தேர்வு அமைந்திருந்தது.

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபியில் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் டி காக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 12 ரன்களில் பியூஷ் சாவ்லாவின் சுழலில் விழ, அதற்கடுத்த ஓவரில் சாம் கரனின் பந்தில் டி காக் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சூர்யகுமாரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சவுரப் திவாரியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த போட்டியில் சவுரப் திவாரியின் தேர்வு மும்பை இந்தியன்ஸில் சர்ப்ரைஸான தேர்வு. இடது கை இளம் அதிரடி வீரரான இஷான் கிஷான் சேர்க்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சவுரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

4ம் வரிசை வீரராக இஷான் கிஷான் தான் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த 2 சீசன்களில் அவர் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியுள்ளார். பெரிய ஷாட்டுகளை ஆடக்கூடிய அதிரடி வீரர் அவர். ஆனால் அவர் ஆடும் லெவனில் எடுக்கப்படாமல், சவுரப் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் அவர் ஐபிஎல்லில் ஆடாத நிலையில் அவரை இந்த சீசனில் எடுத்த மும்பை இந்தியன்ஸ், அவருக்கு ஆடும் லெவனிலும் வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சிறப்பாகவே ஆடினார். 31 பந்தில் 42 ரன்கள் அடித்து திவாரி ஆட்டமிழந்தார்.

loader