MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவாரா சஞ்சு சாம்சன்.? ஒப்பந்தத்தில் நீடிக்கும் மர்மம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவாரா சஞ்சு சாம்சன்.? ஒப்பந்தத்தில் நீடிக்கும் மர்மம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனைப் பெற ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏனெனில் ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 12 2025, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சஞ்சு சாம்சன் சிஎஸ்கே
Image Credit : ANI

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே

சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர இன்னும் சில நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை அணி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து சஞ்சுவை பெற திட்டமிட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை. ஏனெனில் ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவரை விடாமல் இங்கிலாந்து வீரர் சாம் கரனை சேர்க்க முடியாது.

24
சாம் கரன் பிரச்சனை
Image Credit : X/IamSanjuSamson

சாம் கரன் பிரச்சனை

மேலும், சாம் கரனின் சம்பளமும் ஒரு பிரச்சனை. அவர் சென்னையில் ரூ.2.4 கோடி சம்பளம் பெறுகிறார், ஆனால் ராஜஸ்தான் அணிக்கு தற்போது ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது. இதனால், அவரை வாங்க ராஜஸ்தான் சில வீரர்களை விற்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது, ​​சென்னை அணியில் ஜடேஜா மற்றும் கரனும், ராஜஸ்தானில் இருந்து சஞ்சுவும் ஒப்புதல் அளித்துள்ளனர். BCCI மற்றும் ECB அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தம் நிறைவேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஐபிஎல் ஏலம் தேதி லீக்! WPL மெகா ஏலத்தில் செம ட்விஸ்ட்.. தீப்தி சர்மாவுக்கு நடந்தது என்ன?
Related image2
2026 ஐபிஎல் தொடரில் தல தரிசனம் உறுதி.. தோனியின் வருகையை உறுதி செய்த CSK
34
சிஎஸ்கே ராஜஸ்தான் பரிமாற்றம்
Image Credit : X/DVtweetx

சிஎஸ்கே ராஜஸ்தான் பரிமாற்றம்

இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சமூக வலைதளத்தில் “விசில் போடு” ஹாஷ்டேக்குடன் சஞ்சுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த பதிவு வைரலாகி, ரசிகர்கள் சஞ்சு சென்னைக்கு வரப்போகிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும் சஞ்சுவுக்கு வாழ்த்து தெரிவித்தன. அணிகள் தங்கள் ரிட்டெய்ன் பட்டியலை டிசம்பர் 15க்குள் அறிவிக்க வேண்டும்.

44
ராஜஸ்தான் ராயல்ஸ்
Image Credit : ANI

ராஜஸ்தான் ராயல்ஸ்

அதற்கு முன்பே சஞ்சுவின் பரிமாற்றம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சென்னை அணி அஷ்வினுக்குப் பதிலாக வாஷிண்டன் சுந்தரை பெற முயன்றது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த கோரிக்கையை நிராகரித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு
ஐபிஎல்
சிஎஸ்கே
ராஜஸ்தான் ராயல்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Recommended image2
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
Recommended image3
மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
Related Stories
Recommended image1
ஐபிஎல் ஏலம் தேதி லீக்! WPL மெகா ஏலத்தில் செம ட்விஸ்ட்.. தீப்தி சர்மாவுக்கு நடந்தது என்ன?
Recommended image2
2026 ஐபிஎல் தொடரில் தல தரிசனம் உறுதி.. தோனியின் வருகையை உறுதி செய்த CSK
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved