நீயெல்லாம் மனுஷனே இல்ல, அதையும் தாண்டி மெஷின், ரன் மெஷின் – கோலி அதிரடியால் ஆர்சிபி 183 ரன்கள் குவிப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 19ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது.
RR vs RCB, Virat Kohli 113 Runs
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 19ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.
RR vs RCB 19th IPL Match 2024
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பிங்க் நிற ஜெர்சியில் விளையாடுகிறது. விராட் கோலி மற்றும் பாப் டூ ப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 2ஆவது ஓவர் முதல் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Rajasthan Royals
தற்போது 242 ஆவது இன்னிங்ஸில் விளையாடி வரும் கோலி, 7500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலியைத் தொடர்ந்து ஷிகர் தவான், 221 போட்டிகளில் 6755 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
Royal Challengers Bengaluru
தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில், 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். விராட் கோலி மட்டுமே அதிவேகமாக 6000, 6500, 7000 மற்றும் 7500 ரன்களை கடந்துள்ளார். கூடிய விரைவிலேயே 8000 ரன்களையும் கடப்பார் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru
நிதானமாக விளையாடிய கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ் 33 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி மற்றும் பாப் டூ ப்ளெசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 125 ரன்கள் குவித்தது.
Virat Kohli 8th IPL Century
மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 1432 ரன்கள் குவித்துள்ளது. அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் நடையை கட்டினார். சௌரவ் சௌகான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Virat Kohli 7500 Plus Runs
தொடக்கம் முதலே பவுண்டரியாக விளாசி வந்த விராட் கோலி 67 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 8ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும், இந்த சீசனில் முதல் வீரராக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இறுதியாக விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
RR vs RCB, 19th IPL 2024 Match
இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப்பை கோலி தன் வசப்படுத்தியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான பர்பிள் கேப் பெற்றார். மேலும், நந்த்ரே பர்கர் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.