ஐபிஎல் 2025 கனவு டிரேட்: ஆர்சிபியில் ரோகித், சிஎஸ்கேயின் சிம்மாசன்ம் தோனி இடத்தை நிரப்புவாரா ரிஷப் பண்ட்?
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது குறித்தும், மெகா ஏலம் நடத்துவது குறித்தும் பிசிசிஐயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், ரோகித் சர்மா ஆர்சிபி அணிக்கும், ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கும் செல்வது போன்ற கனவு டிரேடுகள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
IPL 2025
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அண்மையில் ஐபிஎல் உரிமையாளர்கள் பிசிசியை சந்தித்து பேசியுள்ளனர். அதில், குறைந்தது 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. மேலும், மெகா ஏலம் நடத்தவும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
IPL 2025 Mega Auction
எனினும் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. ஆனால், இதுவரையில் தேதி அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை ஐபிஎல் 2025க்கான மினி ஏலம் நடைபெற்றால் அதற்கு முன்னதாக நடைபெறும் 5 கனவு டிரேட் பற்றி பார்க்கலாம் வாங்க.
Rohit Sharma in RCB Dream Trade
ஆர்சிபி கேப்டனாக ரோகித் சர்மா இணைந்தார்:
ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்தவர் ரோகித் சர்மா. ஆதலால் ஐபிஎல் 2025ல் ஒரு கேப்டனாகவே செயல்பட விரும்புவார். ஆர்சிபி இன்னும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத நிலையில், ரோகித் சர்மா ஆர்சிபி அணியில் கேப்டனாக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மட்டும் நடந்தால் ரோகித் மற்றும் கோலி காம்போ பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
Rishabh Pant in CSK after MS Dhoni Wicket Keeper
சிஎஸ்கே அணியில் ரிஷப் பண்ட்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு குறித்து அறிவிக்கலாம். அதன் பிறகு சிஎஸ்கே அணிக்கு ஒரு திறமையாக விக்கெட் கீப்பர் கூட இல்லை என்று கருதும் போது அதற்கான கனவில் வருபவர் ரிஷப் பண்ட் தான். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனைகளை படைத்தவர் பண்ட் தான். தோனிக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பக் கூடிய தகுதியும், திறமையும் பண்டிற்கு உண்டு.
Yuzvendra Chahal - RCB
ஆர்சிபியில் யுஸ்வேந்திர சாஹல்:
கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு யுஸ்வேந்திர சாஹலை ஆர்சிபி விடுவித்தது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரரை கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதன் பிறகு சாஹலை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டுகாலமாக ஆர்ஆர் அணியில் சாஹல் சிறந்து விளங்கினார். இன்னும் ஓரிரு மாதங்களில் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஆர்சிபி சாஹலை ஏலம் எடுத்தால் அது கனவு வர்த்தமாக இருக்கும்.
KL Rahul - SRH
கேஎல் ராகுல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஆரம்பத்தில் கேஎல் ராகுல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவரை விடுவிக்கவே, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். ஒருவேளை ராகுலை லக்னோ விடுவித்தால் அவர் கனவு வர்த்தகத்தில் ஹைதராபாத் அணிக்காக விளையாடுவார். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஏனென்றால் லக்னோ அணியின் சொக்கத்தக்கமாக ராகுல் இருப்பதாக அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.
Faf du Plessis - CSK
ஃபாப் டூப்ளெசிஸ் -சிஎஸ்கே:
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபாப் டூ ப்ளெசிஸை ஒப்பந்தம் செய்ய முயன்று தோல்வி அடைந்தது. ஆர்சிபிக்காக 3 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட ஃபாப் டூப்ளெசிஸ் ஒரு முறை கூட டிராபி வென்று கொடுக்கவில்லை. ஆனால், அடுத்த ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியுடன் இணையும் விருப்பம் இருந்தால், அவர் சிஎஸ்கே அணிக்காக ஏலம் எடுக்கப்படலாம். தோனியின் கேப்டன்ஷியின் கீழ் டூப்ளெசிஸ் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் விளையாடியிருக்கிறார்.