#AUSvsIND ரோஹித் சர்மா அரைசதம்.. 2வது இன்னிங்ஸில் நல்ல தொடக்கம்..! இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு
First Published Jan 10, 2021, 2:41 PM IST
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். அதனால், இலக்கு கடினமானதாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பும் உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 94 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்திருந்தது ஆஸி., அணி. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை ஸ்மித்தும் லபுஷேனும் தொடர்ந்தனர். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர். லபுஷேன் 73 ரன்களும், ஸ்மித் 81 ரன்களும் அடித்தனர். மேத்யூ வேட் 4 ரன்களுக்கு நடையை கட்டினார். அதன்பின்னர் கேப்டன் டிம் பெய்னும் கேமரூன் க்ரீனும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கி ஆடிய கேமரூன் க்ரீன் 84 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழக்க, அத்துடன் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸி., அணி. டிம் பெய்ன் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?