IPL 2023: எப்படியாவது ஜெயிக்கணும்; களத்திற்கு வந்து பேட்டிங் டிப்ஸ் கொடுத்த ரிஷப் பண்ட்!
பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் டெல்லி கேபில்ஸ் அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த ரிஷப் பண்ட் தனது வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட்
நடப்பு ஆண்டிற்கான 16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக நடக்கும் போட்டிகள் ஒவ்வொன்றும் த்ரில்லிங் நிறைந்ததாக உள்ளது. ஒவ்வொரு அணியும் கடைசி வரை போராடி ஒரு பந்தில், ஒரு விக்கெட்டில், கடைசி பந்தில் வெற்றி பெற்று வருகின்றன
ரிஷப் பண்ட்
இதுவரையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், இதுவரையில் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி கண்டு, டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ரிஷப் பண்ட்
நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் 20ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக தற்போது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இரு அணிகளும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிஷப் பண்ட்
கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்து காரணமாக இந்த ஆண்டிற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
ரிஷப் பண்ட்
கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை காண்பதற்கு ரிஷப் பண்ட் நேரில் வந்திருந்தார்.
ரிஷப் பண்ட்
ஆனால், நாளை நடக்கவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எப்படியாவது தனது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கருதி வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுப்பதற்கு மைதானத்திற்கு வந்துள்ளார். அவர் அக்ஷர் படேல் உடன் பேசிக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.