#AUSvsIND ரிஷப் பண்ட், ஜடேஜாவிற்கு காயம்..! களத்திற்கு வராததால் ரசிகர்கள் அதிர்ச்சி.. இந்திய அணிக்கு பலத்த அடி
First Published Jan 9, 2021, 2:40 PM IST
ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் காயம் அடைந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்தியா ஆஸி., இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு சுருண்டது. 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்துள்ளது. மொத்தமாக 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது ஆஸி., அணி உள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போது, இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் ரிஷப் பண்ட்டின் இடது முழங்கையில் அடிபட்டது. வலியால் துடித்த அவரை ஃபிசியோ களத்திற்கு வந்து பரிசோதித்துவிட்டு சென்றார். அதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய அவர் 36 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட்டிற்கு ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், 2வது இன்னிங்ஸில் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?