SA vs IND: சிக்ஸ் அடிச்சு கண்ணாடியை சுக்கு நூறாக நொறுக்கிய ரிங்கு சிங்: புலம்பும் தென் ஆப்பிரிக்கா அண்ட் கோ!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது ரிங்கு சிங் அடித்த சிங் மைதானத்திலுள்ள செய்தியாளர் மாடத்தின் ஜன்னல் கண்ணாடிய சுக்கு நூறாக நொறுக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Rinku Singh
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில், முதலில் டாஸ் ஜெயிச்ச தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
Rinku Singh
அதன்படி வந்த திலக் வர்மா 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர், 56 ரன்களில் வெளியேறவே, ஜித்தேஷ் சர்மா 1 ரன் வெளியேறவே ரவீந்திஅ ஜடேஜா களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தார்.
SA vs IND 2nd T20I Rinku Maiden Fifty
அதிரடியாக விளையாடி வந்த ரிங்கு சிங் 30 பந்துகளில் டி20 போட்டியில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதையடுத்து போட்டியின் 19ஆவது ஓவரை தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் வீசினார்.
Team India
இந்த ஓவரின் 5 மற்றும் 6ஆவது பந்துகளில் ரிங்கு சிங் தொடர்ந்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில், ஒரு சிக்ஸர் செய்தியாளர் மாடத்தின் ஜன்னல் கண்ணாடியை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. இது தொடர்பான புகைப்படத்தை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடவே வைராலனது.
Yashasvi Jaiswal
கடைசியாக போட்டியின் 19.3 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிடவே போட்டியானது நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்த நிலையில், 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்காவிற்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸ் உள்பட 68 ரன்களுடன் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rinku Singh
பின்னர் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மேத்யூ ப்ரீட்ஸ்கே இருவரும் அதிரடியாகவே ஆரம்பித்தனர். இதில், ப்ரீட்ஸ்கே 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 49 ரன்களில் வெளியேறினார்.
India vs South Africa 2nd T20I
அப்போது தென் ஆப்பிரிக்கா 8.6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்துவிட்டது. அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லர் 17 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக, 13.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணியானது 5 விக்கெட் இழந்த நிலையில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
SA vs IND 2nd T20 Live
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி வரும் 14 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க இருக்கிறது.