தேவையில்லாம உன் விக்கெட்டை தாரைவார்த்துட்ட..! மேத்யூ வேடை பாண்டிங், மார்க் வாக், ஹசி என ஆளாளுக்கு விளாசல்

First Published Jan 8, 2021, 5:15 PM IST

ஆஸி., வீரர் மேத்யூ வேட் அவரது விக்கெட்டை இழந்த விதத்தை கண்டு கடும் அதிருப்தியடைந்த அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், மார்க் வாக், மைக் ஹசி ஆகியோர் மேத்யூ வேடை கடுமையாக விளாசியுள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதம்(131), லபுஷேனின் சிறப்பான அரைசதம்(91) மற்றும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கியின் அரைசதம்(62) ஆகியவற்றால் ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது இந்திய அணி. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்தார். கில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானேவும் புஜாராவும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

wade

wade

மேத்யூ வேட் விக்கெட் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், மேத்யூ வேடுக்கு ஆட்டம் குறித்த விழிப்புணர்வு நிறைய தேவிஅப்படுகிறது. அப்போதுதான் புதிய பந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில், அந்த ஷாட் தேவையில்லாத ஒன்று. அவர் ஆட்டமிழந்ததால், வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள க்றிஸ் க்ரீன் புதிய பந்தை எதிர்கொள்ள நேரிட்டது. ஆட்டத்தின் போக்கை கருத்தில்கொண்டு மேத்யூ வேட் ஆடவில்லை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய மைக் ஹசி,  வேட் அவரது விக்கெட்டை அவராகவே தாரைவார்த்துவிட்டார். மோசமான ஷாட் அது. உணவு இடைவேளைக்கு முன், புதிய பந்தில் க்றிஸ் க்ரீனை களத்திற்கு வரவைத்துவிட்டார் என்று வேடின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பேசிய மார்க் வாக், இது டெஸ்ட் கிரிக்கெட். இதில் அந்த மாதிரியான ஷாட்டெல்லாம் தேவையில்லை. ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் நல்லதுதான். ஆனால் அந்த நேரத்தில் அந்த ஷாட் தேவையில்லாதது என்று மார்க் வாக் கருத்து தெரிவித்தார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?