MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கடைசி ஓவரில் நடந்த சுவாரஸ்யம் – நோபால் வீசியும் வெற்றி பெற்ற ஆர்சிபி; ஹீரோவான யாஷ் தயாள்!

கடைசி ஓவரில் நடந்த சுவாரஸ்யம் – நோபால் வீசியும் வெற்றி பெற்ற ஆர்சிபி; ஹீரோவான யாஷ் தயாள்!

IPL 2025 Match Results RCB vs CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : May 04 2025, 02:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு   சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ்

RCB vs CSK IPL 2025 Match Highlights : பெங்களூரு சின்னச்சுவாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி நாங்கள் பவுலிங் செய்கிறோம் என்று அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி பொறுப்பை உணர்ந்து விளையாடி 213/5 ரன்கள் குவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
விராட் கோலி மற்றும் ஜாக்கோப் பெத்தெல் அதிரடி

விராட் கோலி மற்றும் ஜாக்கோப் பெத்தெல் அதிரடி

தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஜாக்கோப் பெத்தெல் இருவரும் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தனர்.  பெத்தெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விராட் கோலியும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 62 ரன்கள் குவித்தார்.

311
ஆர்சிபி 213/5 ரன்கள் குவிப்பு!

ஆர்சிபி 213/5 ரன்கள் குவிப்பு!

கடைசியில் வந்த ரொமாரியா ஷெப்பர்டு 14 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர் விளாசி குறைவான பந்துகளில் அரைசதம் (53 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகீஷா பத்திரனா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நூர் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.

411
சிஎஸ்கே அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்கு!

சிஎஸ்கே அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்கு!

பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஷீத் 14 ரன்களில் நடையை கட்ட, சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். மாத்ரே மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் எடுத்து கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். என்றாலும், சிஎஸ்கே அணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேலும், சிஎஸ்கே 200 ரன்களை எட்டவும் உதவினார்.

511
ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவிப்பு!

ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவிப்பு!

மாத்ரே 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் உள்பட 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மாத்ரே 25 பந்துகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 17 வயது 291 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா 21 வயது 148 நாட்களில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

611
சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு CSK அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர்!

சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு CSK அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர்!

அவருக்கு பிறகு வந்த டெவால்ட் பிரேவிஸ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜடேஜா உடன் தோனி ஜோடி சேர்ந்தார். ஆனாலும் அவர் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. இறுதியாக சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 12 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.

711
புவனேஷ்வர் குமார் ஓவர் – கேட்சை வீட்ட கோலி!

புவனேஷ்வர் குமார் ஓவர் – கேட்சை வீட்ட கோலி!

போட்டியின் 19அவது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி நழுவவிட்டார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. இதே போன்று 5ஆவது பந்தை தோனி சிக்சருக்கு விரட்டினார். 

811
50 சிக்சர்கள் அடித்து தோனி சாதனை

50 சிக்சர்கள் அடித்து தோனி சாதனை

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு (ஆர்சிபிக்கு) எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே 14 ரன்கள் எடுத்தது.

911
கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவை – யாஷ் தயாள் ஹீரோ

கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவை – யாஷ் தயாள் ஹீரோ

இறுதியாக 6 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் அந்த ஓவரை வீசினார். முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 3ஆவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார. ரெவியூவும் எடுத்தார். ஆனாலும் அவுட்டு தான் வந்தது. எஞ்சிய 3 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இம்பேக்ட் பிளேயராக ஷிவம் துபே களமிறங்கினார். முதல் பந்தையே நோபாலாக வீசினார். அந்த பந்தில் ஷிவம் துபே சிக்ஸர் அடித்தார்.

1011
நோபால் போட்டும் வெற்றி பெற்ற சிஎஸ்கே

நோபால் போட்டும் வெற்றி பெற்ற சிஎஸ்கே

கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிஎஸ்கே கடைசி 3 பந்திலும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட சிஎஸ்கே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதியாக சிஎஸ்கே 211/5 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே அணிக்கு எதிரான 2 போட்டியிலும் ஆர்சிபி வெற்றி பெற்றது.

1111
ஆர்சிபி 16 புள்ளிகள்

ஆர்சிபி 16 புள்ளிகள்

அதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி 16 புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் ஆர்சிபி 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்துள்ளது. ஏற்கனவே விளையாடிய 10 போட்டிகளில் 8 தோல்விகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிய சிஎஸ்கே அணி இப்போது 9 ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சிஎஸ்கே vs ஆர்சிபி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2025
ஐபிஎல்
இந்தியன் பிரீமியர் லீக்
ஐபிஎல் 2025 பிளேஆஃப் அணிகள்
எம். எஸ். தோனி
விராட் கோலி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
ஆர்சிபி வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே! இரு அணிகளின் பிளேயிங் லெவன்!
Recommended image2
பெங்களூருவில் இன்று நடைபெறும் RCB vs CSK போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved