CSK, MI: சென்னை ஒன்னு ஜெயிச்சா மும்பை ரெண்டு ஜெயிக்க பிளான் பண்ணும் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள நிலையில் மும்பை அணியின் திட்டம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபனாக பேசியுள்ளார்.
Dhoni and Jadeja
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதறகான ஏலத்தில் பங்கேற்க 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.
Mumbai Indians
இதில், 333 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட உள்ளனர். எஞ்சிய 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 333 வீரர்களில் 214 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இதில், 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 116 வீரர்கள் (Capped) கேப்டு வீரர்கள். அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள்.
Chennai Super Kings
மேலும், 215 வீரர்கள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இடம் பெறுகின்றனர். அதாவது Uncapped என்று சொல்லப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள். இது தவிர அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 10 செட்டுகளாக வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு செட்டிலும், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர் என்று வீரர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
mumbai indians
ஐபிஎல் தொடரில் இடம் பெறும் 10 அணிகளில் மொத்தமாக 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், 30 வீரர்கள் வெளிநாட்டவர்கள். 45 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.
IPL 2024
ஏற்கனவே குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் டிரேட் முறையில் வாங்கியது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது மொத்தமாக 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 8 வீரர்களை ஏலத்தில் எடுக்க இருக்கிறது.
CSK and MI
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அந்த 6 இடங்களுக்கு அர்ஷின் குல்கர்னி, ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திரா, பேட் கம்மின்ஸ், ஷாருக் கான் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Chennai Super Kings
இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியானது சிஎஸ்கே வீரரான மதீஷா பதிரனாவை விலைக்கு வாய்ப்பு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால், அவர் மறுப்பு கூறியதாக சொல்லப்படுகிறது. இதே போன்று குல்தீப் யாதவ்வையும் தட்டி தூக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
Mumbai Indians
இந்த நிலையில் தான் மினி ஏலம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபியை வென்றுள்ளன.
Ravichandran Ashwin
மும்பை இந்தியன்ஸ் எப்படி பிளான் செய்யும் என்பது குறித்து நண்பர் ஒருவர் தன்னிடம் கூறியதாக, ரகசியத்தை வெளியிட்டார். அதாவது. சிஎஸ்கே அணி ஒரு முறை சாம்பியனானால், அடுத்து 2 முறை எப்படியாவது சிஎஸ்கே வென்று அதிக முறை டிராபியை கைப்பற்றிய அணிகளில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று மும்பை எண்ணுமாம்.
IPL 2024 Auction
ஒருமுறை பஞ்சாப் அணியிலிருந்த போது டேவிட் மில்லரை மும்பை கேட்டதாகவும், அதற்கு பதிலுக்கு எந்த வீரரையும் தர முடியாது, பணம் வேண்டுமென்றால் தருகிறோம் என்று மும்பை இந்தியன்ஸ் கூறியதாகவும் அஸ்வின் தனது வீடியோவில் கூறியிருக்கிறார்.