கொம்பன் அடிச்ச அடில ஆடிப்போன குஜராத் – பீல்டிங்கும், பவுலிங்கும் சரில – 196 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
Rajasthan Royals vs Gujarat Titans
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். ஒரு கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். மேலும், யுஸ்வேந்திர சஹாலின் 150ஆவது ஐபிஎல் போட்டி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
Rajasthan Royals vs Gujarat Titans, 24th Match
இவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 8 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
RR vs GT, Sanju Samson and Riyan Parag
அதன் பிறகு அங்கிருந்து போட்டியை தங்களது பக்கம் கொண்டு வந்தனர். அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து, இந்த சீசனில் 3ஆவது அரைசதம் அடித்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5ஆவது அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
Rajasthan Royals vs Gujarat Titans
கடைசியில் ரியான் பராக் 48 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ரியான் பராக் 0 மற்றும் 6 ரன்களில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குஜராத் வீரர்கள் தவறவிட்டனர்.
Rajasthan Royals vs Gujarat Titans, 24th Match
அதன் பிறகு ஷிம்ரன் ஹெட்மயர் களமிறங்கினர். தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடிய சாம்சன் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட்மயர் 13 ரன்கள் எடுத்தார்.
RR vs GT 24th IPL Match
இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதில், 2ஆவது 10 ஓவருக்கு ராஜஸ்தான் 123 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஏகப்பட்ட கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் நழுவவிட்டனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் உமேஷ் யாதவ், ரஷீத் கான், மோகித் சர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.