MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • LSG vs KKR: ஐபிஎல்லில் சரித்திரம் படைத்த டி காக் - ராகுல் ஜோடி..! செம ரெக்கார்டு

LSG vs KKR: ஐபிஎல்லில் சரித்திரம் படைத்த டி காக் - ராகுல் ஜோடி..! செம ரெக்கார்டு

ஐபிஎல்லில் விக்கெட்டே இழக்காமல் ஒரு இன்னிங்ஸை முழுவதுமாக முடித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர் டி காக் - கேஎல் ராகுல் ஜோடி. முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளனர். 

1 Min read
Author : karthikeyan V
Published : May 18 2022, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.
 

34

15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16வது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. 

44

ஐபிஎல்லில் முதல் விக்கெட்டுக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் வார்னரும் பேர்ஸ்டோவும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்திருந்தனர். இந்த பட்டியலில் கிறிஸ் லின் - கம்பீர் அடித்த ஜோடி (184*) 3ம் இடம் வகிக்கிறது. ஐபிஎல்லில் விக்கெட்டே விழாமல் இன்னிங்ஸ் முழுவதையும் முடித்த முதல் ஜோடி மற்றும் ஒரே ஜோடி (இதுவரை) என்ற சரித்திரத்தை படைத்துள்ளனர் டி காக் - ராகுல்.
 

About the Author

KV
karthikeyan V
ஐபிஎல்
கே. எல். ராகுல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
Recommended image2
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
Recommended image3
India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved