ஹோம் மைதானத்தை மாற்றிய பஞ்சாப் கிங்ஸ் – ஹர்ஷல் படேலுக்கு ஸ்கெட்ச் போட்டது சரிதானோ?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானமாக மொஹாலி இருந்து வந்த நிலையில், இனிமேல் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் முல்லன்பூன் மைதானமாக மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024: Punjab Kings Home Ground Mullanpur
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் துபாயில் நடந்தது.
Punjab Kings Team Players
இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ரூ.11.75 கோடிக்கு ஹர்ஷல் படேல் வாங்கப்பட்டார். ரிலீ ரோஸோவ் ரூ.8 கோடிக்கும், கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கும், தனய் தியாகராஜன், விஸ்வநாத் பிரதாப் சிங், அசுதோஷ் சர்மா, ஷஷாங்க் சிங் மற்றும் பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டனர்.
Mohali Home Ground
இதுவரையில் நடந்த 16 சீசன்களில் ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியானது ஒரு முறை இறுதிப் போட்டி வரை சென்று 2ஆவது இடம் பிடித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் சீசனுக்கு சீசன் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என்று ஒவ்வொருவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
Punjab Kings Auction Players
இந்த நிலையில் தான், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானமாக இருந்து வந்த மொஹாலி இனிமே, அந்த அணியின் ஹோம் மைதானமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், மொஹாலிக்கு பதிலாக, புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லன்பூர் மைதானத்தை ஹோம் மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Punjab Kings Home Ground
இந்த மைதானமானது ரூ.230 கோடி செலவில் கிட்டத்தட்ட 42 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்கு ஏற்ப 12 பிட்சுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
IPL 2024
மேலும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானமானது, பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Punjab Kings
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது முல்லன்பூரில் தான் ஹோம் மைதான போட்டிகளில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.