5 முறை சாம்பியன்களான MI மற்றும் CSKயை வீழ்த்தி ஒரு கேப்டனாக பேட் கம்மின்ஸ் சாதனை!
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை வீழ்த்தி ஒரு கேப்டனாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார்.
Sunrisers Hyderabad
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
KKR vs SRH, IPL 2024
முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 204 ரன்கள் எடுத்து 4 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டிய நிலையில் தோல்வியை தழுவியது.
SRH vs MI IPL 2024
2ஆவது போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ்:
ஹைதராபாத்தில் நடந்த 2ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து வரலாற்ற் சாதனை படைத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து சன்ரைசர்ஸ் சாதனை படைத்தது. கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
GT vs SRH, IPL 2024
3ஆவது போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ்:
அகமதாபாத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
SRH vs CSK, IPL 2024
4ஆவது போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஹைதராபாத்தில் நடந்த 4ஆவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.
Sunrisers Hyderabad Captain Pat Cummins
இதுவரையில், 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய ஒரே கேப்டன் என்ற சாதனையை தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார். இதற்காகத்தான் அவர் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிற்காக வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.