MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • முகமது கஜினி மாதிரி திரும்ப திரும்ப இந்தியா வந்த நியூசிலாந்து – 12 தோல்வி, 13ஆவது முயற்சியில் வெற்றி கிட்டுமா?

முகமது கஜினி மாதிரி திரும்ப திரும்ப இந்தியா வந்த நியூசிலாந்து – 12 தோல்வி, 13ஆவது முயற்சியில் வெற்றி கிட்டுமா?

New Zealand Lost 12 Test Series in India: முகமது கஜினி இந்தியா மீது 17 முறை படையெடுத்தது போன்று நியூசிலாந்து அணியானது 12 தோல்விகளுக்கு பிறகு 13 ஆவது முயற்சிக்கு இந்தியா வந்திருக்கிறது.

3 Min read
Author : Rsiva kumar
Published : Oct 17 2024, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
IND vs NZ Test Cricket, New Zealand Lost 12 Test Series in India

IND vs NZ Test Cricket, New Zealand Lost 12 Test Series in India

New Zealand Lost 12 Test Series in India: இந்தியா மீது 17 முறை படையெடுத்த முகமது கஜினி மாதிரி நியூசிலாந்து அணியானது 12 முறை இந்தியாவிற்கு வந்து தோல்வியோடு நாட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளது. தற்போது 13 ஆவது முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு வான்கடேயில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா வந்த நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
IND vs NZ Test Cricket

IND vs NZ Test Cricket

இதில், 2 போட்டியிலும் தோல்வியோடு நாடு திரும்பியது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடவில்லை.

310
India vs New Zealand, Test Cricket, M Chinnaswamy Stadium

India vs New Zealand, Test Cricket, M Chinnaswamy Stadium

இதையடுத்து, 2ஆவது நாள் போட்டி இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி மோசமான சாதனை படைத்தது. 3ஆவது முறையாக இந்திய அணி குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அதாவது இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் மட்டுமே அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.

410
IND vs NZ 1st Test Cricket

IND vs NZ 1st Test Cricket

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற முகமது சிராஜ் மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இந்த இன்னிங்ஸில் பவுண்டரி அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி, சர்ஃபராஸ் கான் இருவரும் 0 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

510
IND vs NZ 1st Test

IND vs NZ 1st Test

அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது வரிசையில் களமிறங்கிய விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.

610
Rohit Sharma, IND vs NZ Test Cricket

Rohit Sharma, IND vs NZ Test Cricket

விராட் கோலி டக் அவுட்

கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 33 ஆவது இன்னிங்ஸில் இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

710
India vs New Zealand, Test Cricket

India vs New Zealand, Test Cricket

கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே தலா 6 பந்துகள் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். ரவிச்சந்திரன் அஸ்வின் கோல்டன் டக்கில் நடையை கட்டினார். கடைசியாக குல்தீப் யாதவ் 2, பும்ரா 1 மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுக்கவே இந்தியா 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.

810
Rishabh Pant, IND vs NZ, Test Cricket

Rishabh Pant, IND vs NZ, Test Cricket

இதன் மூலமாக இந்தியா 3ஆவது முறையாக குறைவான ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இது தான் இந்திய அணியின் மிக குறைவான ஸ்கோர் ஆகும். இதே போன்று 1974 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்க்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்தது.

910
India vs New Zealand Test Cricket

India vs New Zealand Test Cricket

1947 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸிக்கு எதிராக 58 ரன்களில் நடையை கட்டியது. இதே போன்று 1952 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதுவே ஹோம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 50 ரன்களுக்கும் குறைவாக 46 ரன்களுக்கு சுருண்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிக்கு எதிராக 62 ரன்களில் சுருண்டது.

1010
Team India Lowest Totals in Test Cricket

Team India Lowest Totals in Test Cricket

இந்திய அணியின் குறைவான ஸ்கோர்:

46 ரன்கள் - இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*

62 ரன்கள் – நியூசிலாந்து v இந்தியா, மும்பை, 2021

75 ரன்கள் - இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987

76 ரன்கள் – இந்தியா v தென் ஆப்பிரிக்கா, அகமதாபாத், 2008

79 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா v இந்தியா, நாக்பூர், 2015

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பெங்களூரு
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved