MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024: முதல் போட்டியில் ஏமாற்றம் - இந்தியா படுதோல்வி

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024: முதல் போட்டியில் ஏமாற்றம் - இந்தியா படுதோல்வி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்திலேயே இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளது. 

2 Min read
Author : Velmurugan s
Published : Oct 05 2024, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024: டி20 உலகக் கோப்பையை வென்று அசத்திய ரோகித் படையின் உத்வேகத்துடன் களமிறங்கிய மகளிர் அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தோல்வியுடன் தொடங்கியுள்ளது. இந்த சிறிய கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி ரன் சேசிங் செய்வதில் தடுமாறியது. முதலில் பேட் செய்து 160 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி பந்துவீச்சிலும் அசத்தியது. இதனால் இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

நியூசிலாந்து பேட்டிங் : 

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி  துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு மிக சிறப்பான தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பெய்ட்ஸ் 27 ரன்கள் (24 பந்துகளில்), ப்ளிம்மர் 34 ரன்கள் ( 23 பந்துகளில்) அருமையாக ஆடி 67 ரன்கள் சேர்த்தனர். 

ஆனால் அடுத்தடுத்து ஓப்பனர்கள் இருவரும் அவுட் ஆன போதிலும் நியூசிலாந்து அணியின் வேகம் குறையவில்லை. கேப்டன் டிவைன் இந்திய பந்துவீச்சாளர்களை நைய புடைத்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி. 
 

34
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

இந்திய அணியை சின்னாபின்னமாக்கிய நியூசிலாந்து 

161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர் ஷஃபாலி வர்மா வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 11 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது தொடங்கிய விக்கெட் சரிவு தொடர்ந்ததால் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

ஸ்மிருதி மந்தனா 12, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15, ஜெமிமா 13, ரிச்சா கோஷ் 12, தீப்தி சர்மா 13, அருந்ததி ரெட்டி 1, பூஜா வஸ்த்ரகர் 8, ஸ்ரேயங்கா பட்டீல் 7, ஆஷா ஷோபனா 6(ஆட்டமிழக்காமல்), ரேணுகா தாக்கூர் 0 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி19 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் ரோஸ் மேரி 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளும். லியா தஹுஹு 3, இடன் கார்சன் 2, அமெலியா 1 விக்கெட் வீழ்த்தினர். 
 

44
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024

புள்ளி பட்டியல்:

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 'ஏ' பிரிவு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.  இலங்கையுடனான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இதற்கிடையில் 'பி' பிரிவில் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதில் வங்கதேசம் முதலிடத்திலும்  தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து அணிகள் தலா ஒரு தோelf வுடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(37.2 ov)121/3
SLSL
98
Day 1
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image2
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Recommended image3
MS Dhoni IPL Retirement: ஐபிஎல்-ல தோனியோட இந்த சாதனைகளை யாராவது முறியடிப்பாங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved