கப்டில் காட்டடி.. நியூசி., நிர்ணயித்த கடின இலக்கை வெறித்தனமா விரட்டி கடைசி ஓவரில் கோட்டைவிட்ட ஆஸி.,
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் கோட்டைவிட்டு 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
220 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் 12 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் 24 ரன்னில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய ஜோஷ் ஃபிலிப் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அஷ்டன் அகர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினர்.