MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கேப்டன்ஸி சிக்கலில் ஹர்திக் பாண்டியா – டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்?

கேப்டன்ஸி சிக்கலில் ஹர்திக் பாண்டியா – டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 07 2024, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
MI vs DC, IPL 20th Match

MI vs DC, IPL 20th Match

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

25
Delhi Capitals

Delhi Capitals

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

35
Mumbai Indians

Mumbai Indians

மேலும், 15 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 218 ரன்களும், டெல்லி கேபிடல்ஸ் அதிகபட்சமாக 213 ரன்களும் எடுத்துள்ளன. மும்பை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 92. இதே போன்று டெல்லியின் குறைந்தபட்ச ஸ்கோர் 66 ஆகும்.

45
Mumbai Indians vs Delhi Capitals 20th IPL 2024 Match

Mumbai Indians vs Delhi Capitals 20th IPL 2024 Match

கடந்த ஆண்டு நடந்த ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இரு அணிகளும் வான்கடே மைதானத்தில் மோதிய 9 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

55
MI vs DC 20th IPL Match 2024

MI vs DC 20th IPL Match 2024

ஒட்டு மொத்தமாக வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரையில் 79 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை அணி 48 போட்டியில் வெற்றியும், 30 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இதுவரையில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
டெல்லி கேபிடல்ஸ்
ஹர்திக் பாண்டியா
இந்தியன் பிரீமியர் லீக்
மும்பை இந்தியன்ஸ்
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Recommended image2
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!
Recommended image3
Sanju Samson: 18 ஆண்டுகளாக தோனியால் செய்ய முடியாததை வெறும் 4 போட்டிகளில் செய்து காட்டிய சஞ்சு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved