MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: என்னைய அடிச்சுக்க ஆளே இல்லடா.. டி20-யில் முதலிடம் பிடித்த தோனி..! 41 வயதிலும் தல படைத்த தரமான சாதனை

IPL 2023: என்னைய அடிச்சுக்க ஆளே இல்லடா.. டி20-யில் முதலிடம் பிடித்த தோனி..! 41 வயதிலும் தல படைத்த தரமான சாதனை

டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் தோனி.  

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 22 2023, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர் தோனி. தோனி ஒரு முழுமையான கிரிக்கெட்டர். சிறந்த பேட்ஸ்மேன், தலைசிறந்த கேப்டன், அபாரமான விக்கெட் கீப்பர் என அவர் சார்ந்த அனைத்து வேலைகளிலும் கிரிக்கெட்டில் வல்லவர் தோனி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.

35

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் செம கெத்தான வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே திகழ்வதற்கு முக்கியமான காரணம் தோனி. நடப்பு சீசன் அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார் தோனி.

45

சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் தோனி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவரும் தோனி, சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரமின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

55

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் மஹீஷ் தீக்‌ஷனாவின் பவுலிங்கில் மார்க்ரமின் கேட்ச்சை தோனி பிடித்தார். இது டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக தோனியின் 208வது கேட்ச் ஆகும். இதன்மூலம் டி20யில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். குயிண்டன் டி காக் 207 கேட்ச்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 205 கேட்ச்களுடன் 3ம் இடத்தில் உள்ளார். தோனி கூடிய விரைவில் (இந்த சீசனில் கூட) ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் தோனியின் சாதனையை நெருக்கமாக விரட்டிவரும் டி காக் கண்டிப்பாக முறியடித்துவிடுவார்.

About the Author

KV
karthikeyan V
எம். எஸ். தோனி
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : கடும் வெயில் காரணமாக ஐபிஎல் தொடரை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆலோசனை!
Recommended image2
RCB vs GT: குஜராத்தை கதறவிட்ட ஆர்சிபி! தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்குள் கெத்தாக என்ட்ரி!
Recommended image3
RCB vs GT: பிளே ஆஃப் 'கிங்' ரஜத் படிதார்! சிக்சர் மழை! தோனி, ரெய்னா வரிசையில் மெகா சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved