MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MS Dhoni: சென்னையில் ஆடலைனா தப்பாகிடும்.. அடுத்த சீசனில் கண்டிப்பா ஆடுவேன் - தல தோனி

MS Dhoni: சென்னையில் ஆடலைனா தப்பாகிடும்.. அடுத்த சீசனில் கண்டிப்பா ஆடுவேன் - தல தோனி

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடப்போவதாக தெரிவித்து, ரசிகர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. 

1 Min read
Author : karthikeyan V
| Updated : May 20 2022, 07:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இன்று கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடுகிறது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

dhoni cskஇந்த சீசனின் இடையே தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியை மீண்டும் ஏற்றிருந்தாலும், சீசனின் தொடக்கத்தில் கேப்டன்சியை ஜடேஜாவிடம் ஒப்படைத்ததால் இதுதான் கடைசி சீசனாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சி சரிவராததால் மீண்டும் தோனியே கேப்டன்சியை ஏற்றிருக்கிறார். அடுத்த கேப்டனை செட் செய்துவிட்டுத்தான் செல்வாரா அல்லது இந்த சீசனுடன் ஓய்வுபெற்றுவிடுவாரா என்பது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது. 

35

dhoni cskஆனால், சென்னையில் கடந்த ஆண்டு நடந்த விழா ஒன்றில் பேசிய தோனி, கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என்று உறுதியளித்தார். தோனி உறுதியளித்திருந்தாலும், அவர் எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. என்பதால் ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்திலேயே இருந்தனர்.  

45

டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் இதுதான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமோ என்று குழப்பத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டுவந்தனர். எனவே இதுதொடர்பாக இன்றைய போட்டியின் டாஸின்போது தோனியிடம் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

55

டாஸ் போடும்போது, இதுதான் கடைசி சீசனா அல்லது அடுத்த சீசனில் ஆடுவாரா என்று இயன் பிஷப் கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி, கண்டிப்பாக ஆடுவேன். சென்னையில் விளையாடி சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் அது சரியாக இருக்காது. எனவே அடுத்த சீசனில் கண்டிப்பாக ஆடுவேன் என்றார் தோனி. தோனி அடுத்த சீசனில் ஆடுவதை உறுதி செய்ததால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
 

About the Author

KV
karthikeyan V
RR vs CSK
எம். எஸ். தோனி
ஐபிஎல்
சென்னை சூப்பர் கிங்ஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
Recommended image2
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!
Recommended image3
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved