MS Dhoni, CSK: ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத விராட் கோலிக்கு இடமில்லை, தோனி தான் கேப்டன் – மைக்கேல் வாகன்!
ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாததால் அவரை தனது அணியில் சேர்க்க விரும்பவில்லை என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். தோனி, ரோகித் மற்றும் கோலி ஆகியோரில் தோனியை மட்டுமே தான் தேர்வு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
CSK, MS Dhoni, Rohit Sharma and Virat Kohli
17 ஆண்டுகால ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஆதலால், அவரை நான் விற்கிறேன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே அணிக்காக விளையாடுவது என்பது சாத்தியமற்றது. எனினும், மூவரும் ஒரே அணிக்காக விளையாடினால் அது கனவு நனவாகும். மூன்று நட்சத்திர ஸ்டார்களும் இந்த தொடரில் தொடக்கம் முதலே விளையாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள்.
Indian Premier League - IPL 2025
இருப்பினும், இந்த மூவரில் ஒருவரை விடுவிக்கலாம், ஒருவரை விளையாட வைக்கலாம், ஒருவரை பெஞ்சில் அமர வைக்கலாம் என்றால் யாரை விளையாட வைப்பீர்கள், யாரை விடுவிப்பீர்கள், யாரை பெஞ்சில் அமர வைப்பீர்கள் என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வாகன், எம்.எஸ்.தோனியைவிட சிறந்தவர் எவரும் இல்லை. அவரை விளையாட வைப்பேன். கடந்த 2023ஆம் ஆண்டு வரையில் தோனி தான் சிஎஸ்கேயின் கேப்டனாக இருந்தார். ஒரு முறை கூட டிராபி அடிக்காத விராட் கோலிக்கு என்னுடைய அணியில் இடம் கிடைக்காது என்றார். மேலும், ரோகித் சர்மா மற்றும் தோனி இருவருமே தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளனர். இதில் ஒருபடி முன்னேறி ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கூட டிராபி வென்றிருக்கிறார்.
IPL 2025 Auctions
இதுவரையில் 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தோனி 5243 ரன்கள் எடுத்துள்ளார். வாகனிடம், விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் யாரேனும் விடுவிக்குமாறு கேட்ட போது, அதற்கு வாகன் சற்றும் யோசிக்காமல் விராட் கோலியின் பெயரை குறிப்பிட்டுருக்கிறார். தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா களமிறங்குவார் என்றார். மேலும், தோனி தான் கேப்டன் என்றும் கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லில் பேட்டிங் சாதனைகளைப் பொறுத்தவரை விராட் கோலி மறுக்கமுடியாத G.O.A.T ஆக இருந்தாலும், அணியின் புள்ளி விவரங்கள் வேறு ஒரு கதையைச் சொல்கிறது. ஆர்சிபி 3 ஐபிஎல் இறுதிப் போட்டிகளை எட்டி மூன்றையும் இழந்தது. 2ஆவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸிடம், ஒன்று சிஎஸ்கேக்கு எதிராக, மற்றொன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி 50க்கும் குறைவான வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளது.
MS Dhoni and Virat Kohli
இதே போன்று ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி சதவிகிதம் 55ஆக உள்ளது. எம்.எஸ்.தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவிகிதம் 58.22 ஆக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக சிஎஸ்கேயின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து கடைசி அணியாக வெளியேறியது. ஆர்சிபி எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது. ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றார்.
Rohit Sharma and Virat Kohli
ஆனால், அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு 10 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மெகா ஏலம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்த கடந்த சீசனில் சொதப்பிய வீரர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Virat Kohli and Rohit Sharma
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த சீசன் தான் தோனிக்கு கடைசி சீசன் என்றும் தகவ் வெளியாகி வருகிறது. அதற்கு முன்னதாக சிஎஸ்கே தங்களது அணியை பலப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மாவிற்கு ஆர்சிபி, லக்னோ, டெல்லி அணிகள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேஎல் ராகுல் தக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.