MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!

KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!

KL Rahul: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சூப்பர் சதம் விளாசிய ரன் மெஷின் கே.எல்.ராகுல், ஒரே சதம் மூலம் பல சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 03 2026, 09:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கே.எல்.ராகுல் சாதனை
Image Credit : Social Media

கே.எல்.ராகுல் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டர் கே.எல். ராகுல் ஒரு சூப்பரான சாதனையைச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் 15வது இந்திய வீரர் என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆரம்பத்தில் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொஞ்சம் தடுமாறியது. அப்போ ரோஹித் சர்மாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் அரைசதம் அடித்து அணியை மீட்டனர். பின்பு களமிறங்கிய கே.எல். ராகுல் சும்மா பட்டையைக் கிளப்பினார். வெறும் 80 பந்துகளில் தனது 9வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். கடைசி வரைக்கும் அவுட் ஆகாமல் 87 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். அவரோட ஸ்ட்ரைக் ரேட் 148-க்கும் மேல் இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரன் மெஷின் கே.எல்.ராகுல்
Image Credit : ANI

ரன் மெஷின் கே.எல்.ராகுல்

இதுவரைக்கும் 243 போட்டிகளில் 281 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள ராகுல், மொத்தம் 10,094 ரன்கள் எடுத்துள்ளார். அவரோட சராசரி 41.03. இதில் 23 சதங்களும், 63 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 101 மேட்சுகளில் விளையாடி 3,541 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 51.31, ஸ்ட்ரைக் ரேட் 92-க்கும் மேல். இதில் 9 சதங்களும், 20 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 129 ரன்கள் அடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 70 மேட்ச், 122 இன்னிங்ஸ் விளையாடி 4,288 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.64. இதில் 12 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 199. டி20 போட்டிகளில் 72 மேட்ச், 68 இன்னிங்ஸ் விளையாடி 2,265 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.75, ஸ்ட்ரைக் ரேட் 139-க்கும் மேல். இதில் 2 சதங்களும், 22 அரைசதங்களும் இருக்கு. அதிகபட்சமாக 110 ரன்கள் அடித்துள்ளார்.

34
3வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்
Image Credit : ANI

3வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்

5வது இடத்தில் களமிறங்கி ஒரு இந்திய வீரர் அடித்த 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் யுவராஜ் சிங் 139 ரன்களும், 2017-ல் இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் எம்.எஸ். தோனி 134 ரன்களும் அடித்துள்ளார்கள். இந்த வருஷம் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 10 மேட்ச், 8 இன்னிங்ஸ் விளையாடி 323 ரன்கள் எடுத்துள்ளார் ராகுல். அவரோட சராசரி 80.75, ஸ்ட்ரைக் ரேட் 136.28. இதில் 2 சதங்களும் அடங்கும்.

44
இந்திய அணியும் புதிய சாதனை
Image Credit : ANI

இந்திய அணியும் புதிய சாதனை

இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சுப்மன் கில் (1), விராட் கோலி (0) ரெண்டு பேரும் சீக்கிரமே அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு ரோஹித் சர்மாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோஹித் 85 பந்துகளில் 92 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து அவுட் ஆனார்.

ருதுராஜ் 69 பந்துகளில் 57 ரன்கள் (1 பவுண்டரி, 4 சிக்ஸர்) அடித்தார். கடைசியா ராகுலோட அதிரடி சதத்தால் இந்திய அணி 351/7 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 45வது முறை. உலக அளவில் எந்த அணியும் இத்தனை முறை 350+ ரன்கள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கே. எல். ராகுல்
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Recommended image2
இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் திடீர் ஓய்வு.. இன்ஸ்டாவில் உருக்கம்.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!
Related Stories
Recommended image1
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Recommended image2
Asian Games 2026: இஷான் கிஷான் சரவெடி.. இலங்கையை துவம்சம் செய்த இந்தியா.. பைனலில் பாகிஸ்தானுடன் மோதல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved