- Home
- Sports
- Sports Cricket
- அவுட்டே இல்ல; அவுட்டுன்னு நடையை கட்டி சர்ச்சையில் சிக்கிய இஷான் கிஷான், MIக்கு மறைமுகமாக ஆதரவா?
அவுட்டே இல்ல; அவுட்டுன்னு நடையை கட்டி சர்ச்சையில் சிக்கிய இஷான் கிஷான், MIக்கு மறைமுகமாக ஆதரவா?
Ishan Kishan Walked Off SRH vs MI IPL 2025 match in Tamil : சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- மும்பை இந்தியன்ஸ் போட்டியின்போது இஷான் கிஷன் விசித்திரமான முறையில் வெளியேற்றப்பட்டார். பேட்டில் பந்து படவில்லை என்றாலும், விக்கெட் என்று நினைத்து ரெவியூ எடுக்காமல் டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Ishan Kishan Walked Off SRH vs MI IPL 2025 match in Tamil : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 41ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தின் சொந்த மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இஷான் கிஷான் அவுட் என்று தவறாக எண்ணிக் கொண்டு ரெவியூ எடுக்காமல் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்னதாக டிரெஸிங் ரூமிற்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதற்கு முன்னதக பஹால்கம் தாக்குதலுக்கு இரு அணி வீரர்களும், நடுவர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதோடு அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மும்பை அணியில் தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் லெக் பைஸ் மற்றும் வைடு மூலமாக 2 ரன்கள் வந்தது. 2ஆவது ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஹெட் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார். அவர் 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்திருந்தார். 3ஆவது ஓவரை மீண்டும் சாஹர் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே சர்ச்சைக்குரிய முறையில் இஷான் கிஷான் நடையை கட்டினார். பந்து லெக் சைடில் வைடாக சென்றது. வீக்கெட் கீப்பரும் சரி, பவுலரும் சரி யாருமே முறையாக அப்பீல் செய்யவில்லை. அம்பயரும் ஒரு விதமான குழப்பத்தில் அவுட் கொடுக்கவா வேண்டாமா என்பது போன்று கையை தூங்கினார்.
அவர் கையை தூக்குவதற்கு முன்னதாக இஷான் கிஷான் பேட்டில் பந்து பட்டது என்று எண்ணிக் கொண்டு நடையை கட்டினார். இதனை கிரிக்கெட் விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் விமர்சிக்க தொடங்கினர். ஏற்கனவே ரெவியூ வேறு இருக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் ரெவியூ எடுத்துக் கொள்ளலாம். மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் ரெவியூ கேட்காத நிலையில் இஷான் கிஷான் அப்படியே இருந்திருக்க வேண்டும். ஏன், நடந்து சென்றார் என்றெல்லாம் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
தான் அவுட் என்று நினைத்துக் கொண்டு அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்னதாக நடையை கட்டியை இஷான் கிஷான் தலையில் ஹர்திக் பாண்டியா தட்டிக் கொடுத்தார். இதற்கு முன்னதாக மும்பையில் நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தது போன்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். அதே போன்றுதான் இன்றைய போட்டியிலும் அவர் நடந்து கொண்டாரா என்பது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியொரு விக்கெட் இதுவரையில் ஐபிஎல் தொடரில் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளேயில் சரிவைச் சந்தித்தது. பவர்பிளேயில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 4.1 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (0), அபிஷேக் சர்மா (8), இஷான் கிஷன் (1), நிதீஷ் குமார் ரெட்டி (1) ஆகியோர் அவுட்டானார்கள். தீபக் சாஹர், டிரென்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.